sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வாழ்க வையகம் என வாழ்த்துங்கள்

/

வாழ்க வையகம் என வாழ்த்துங்கள்

வாழ்க வையகம் என வாழ்த்துங்கள்

வாழ்க வையகம் என வாழ்த்துங்கள்


ADDED : ஆக 14, 2020 04:22 PM

Google News

ADDED : ஆக 14, 2020 04:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* காலையில் எழுந்தவுடன் 'வாழ்க வையகம்' என வாழ்த்துங்கள்.

* ஒரு செடியை வாழ்த்தலாம்.அதன் மூலம் செடியின் பலவீனம் நீங்கும்.

* ஆசையை சீர்படுத்தினால் வாழ்வு ஆனந்தமாகும்.

* கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது.

* மனதில் கருணை, உடையில் ஒழுக்கம், நடையில் கண்ணியம் கொண்டவரே நல்லவர்.

* கடமையில் ஈடுபாடு இருந்தால் உரிமையும், நலனும் பாதுகாக்கப்படும்.

* உள்ளத்தில் உறுதி, செயலில் ஒழுக்கம் இருந்தால் குறிக்கோளை அடையலாம்.

* இன்பத்தை விட துன்பத்தில் கிடைக்கும் அனுபவம் மதிப்பு மிக்கது.

* ஆசையை அடக்க முடியாது. அறிய முயன்றால் கட்டுப்படும்.

* உழைப்பால் உடலும், உள்ளமும் பலம் பெறுகிறது.

* உண்மையும், நேர்மையும் துன்பத்தைக் கண்டு அஞ்சுவதில்லை.

* நிம்மதியுடன் வாழ நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள்.

* தனிமனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் சமுதாயமும் மகிழ்ச்சியாக வாழும்.

* நற்செயலில் ஈடுபடுவதால் கிடைக்கும் மனநிறைவே நிஜமான மகிழ்ச்சி.

* கடமை தவறாதவர்களே கடவுளுக்கு விருப்பமானவர்கள்.

உபதேசிக்கிறார் வேதாத்ரி மகரிஷி






      Dinamalar
      Follow us