sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்

/

வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்

வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்

வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்


ADDED : செப் 02, 2012 12:47 PM

Google News

ADDED : செப் 02, 2012 12:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மகத்தான செயல்களைச் செய்வதற்காக கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். அந்தச் செயல்களை விரைந்து செய்து முடிப்போம். உங்களுக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

* எதைச் செய்தாலும் அதன்பொருட்டு மனம், இதயம், ஆன்மா என்று அனைத்தையும் அர்ப்பணித்து விடுங்கள். எதிர்நீச்சல் போடுவதன் மூலம் நிச்சயம் வெற்றி உங்களைத் தேடிவரும்.

* எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை நாம் இப்போதைய செயல்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

* நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக நாம் இருக்கிறோம். எப்போதும் நம்மை நல்ல எண்ணங்களின் கருவி களாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெறச் செய்யும்.

* தூய்மை,பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு அடிப்படையானவை. இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

* எழுந்திருங்கள். விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்கவேண்டாம். வாழ்க்கை ஒரு போர்க்களம். ஆனாலும், எல்லாவற்றையும் சாதிக்க வல்ல பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.

* மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர உங்களின் அறிவாற்றல் பன்மடங்கு பெருகி விடும்.

* விடாமுயற்சி உடையவன் சமுத்திரத்தையே குடித்துவிடுவான். மலையையும் நொறுங்கிவிழச் செய்யும் வலிமை அவனுக்கு வந்துவிடும்.

* லட்சியத்தில் உறுதியான பிடிப்புடன் இருங்கள். யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாதீர்கள். நிச்சயம் ஒருநாள் உலகம் உங்கள் காலடியில் பணிந்து கிடக்கும்.

* ஒருகருத்தை எடுத்துக் கொண்டு அதையே வாழ்வின் ஆதாரமாக்கிக் கொள்ளுங்கள். அக்கருத்தை ஒட்டியே வாழ்க்கை நடத்துங்கள். வெற்றியை அடைய இதுவே எளியவழி.

* தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாராம்சமாகும்.

* மற்றவர்களுக்காக நாம் செய்யும் மிகச் சிறிய உழைப்புகூட நமக்குள்ளே இருக்கும் சக்தியை தட்டி எழுப்பிவிடப் போதுமானது.

முழக்கமிடுகிறார் விவேகானந்தர்






      Dinamalar
      Follow us