sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா... அது திரும்பவும் வராம பாத்துக்கோ...!

/

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா... அது திரும்பவும் வராம பாத்துக்கோ...!

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா... அது திரும்பவும் வராம பாத்துக்கோ...!

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா... அது திரும்பவும் வராம பாத்துக்கோ...!


ADDED : செப் 05, 2016 10:43 AM

Google News

ADDED : செப் 05, 2016 10:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்.11 பாரதியார் நினைவுநாள்

* நடந்தது நடந்தது தான். தெரிந்தோ தெரியாமலோ நடந்த தவறுகளை நினைத்துக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. இனி மேல் அது நடக்காமல் பார்த்துக் கொண்டால் முன்னேற்றத்திற்கு வழி பிறந்து விடும்.

* கோவில் திருவிழாக்களால் ஊருக்குள் ஒற்றுமை ஏற்படும். வீட்டுக்குள் சுவாமியை வணங்குவதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

* கல்லில் மட்டும் கடவுள் இருக்கிறார் என்று நினைக்கக் கூடாது. நம்மைச் சூழ்ந்திருக்கும் உயிர்களிடத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை உணர வேண்டும்.

* கோவிலுக்குப் போனாலும் சரி, போகா விட்டாலும் சரி, கடவுளை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி... யார் ஒருவன் பிறரை ஏமாற்றாமல் வாழ்கிறானோ அவன் கடவுளின் அருளைப் பெறுவது உறுதி.

* 'உலகில் பிறந்து விட்டோம். கடவுள் விட்டதே வழி' என்று வாழுங்கள். ஆற்றில் மிதக்கும் கட்டை போல உலக வெள்ளத்தில் நீந்திச் செல்லுங்கள்.

* மனிதன் தான் விரும்புவதை அடையும் சக்தியை தியானத்தின் மூலம் பெற முடியும்.

* அமைதி, சாந்தம், பக்தி, உறுதி, அருள் போன்ற உயர்ந்த எண்ணங்களை மனதில் நிரப்புங்கள். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

* பொய்யை குறிப்பிட்ட காலம் வேண்டுமானால் மறைக்க முடியும். ஆனால், உண்மை ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.

* காலம் பணவிலை உடையது என்னும் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. பொழுதை வீணாக கழித்தால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போய்விடும்.

* பேச்சும், செயலும் ஒரே விதமாக இருக்கும் நல்லவர்களிடம் நட்பு கொள்ளுங்கள். அப்படி இல்லாதவர்களின் நட்பை கனவிலும் நினைக்கக் கூடாது.

* முயற்சியில் ஈடுபடும் போது தொடக்கத்தில் நமக்கு நாமே துணையாக இருக்க வேண்டும். காலப்போக்கில் தான் மற்றவர்களின் உதவி கிடைக்கும்.

* பயம், சந்தேகம்,கோபம், சோம்பல் போன்ற குணங்கள் நமது வெற்றியைத் தடுத்து நிறுத்துகின்றன. இவையே மனிதர்களின் பகைவர்கள்.

* நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்கும் இடத்தில் தான் வெற்றி இருக்கும். இவை கேட்டதை தரும் காமதேனு போன்றவை.

* பேச்சால் ஒருவரை திருப்திபடுத்தி பயனில்லை. வாக்களித்தபடி செயலிலும் அதை நிறைவேற்றிக் காட்டுவதில் தான் பெருமை இருக்கிறது.

* குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஓடி விளையாட வேண்டும். அவர்கள் ஓய்ந்திருக்கக் கூடாது.

* காலையில் படிப்பு, பிறகு நல்ல பாட்டு, மாலையில் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளும் குழந்தைகள் சிறப்பாகத் திகழ்வார்கள்.

* தலை மீது வானமே இடிந்து விழுந்தாலும் கூட மனிதன் அச்சப்படுவது கூடாது.

சொல்கிறார் தேசியக்கவி






      Dinamalar
      Follow us