ADDED : செப் 10, 2023 06:13 PM

செப்.8 பிறந்தநாள்
* பிடித்த வேலையைச் செய்தால் மனம் சந்தோஷப்படும்.
* கடவுளின் அருள் இன்றி உலகில் எதுவும் நடப்பதில்லை.
* நீ எந்த நிலையில் இருந்தாலும் அதுபற்றி கவலைப்படாதே.
* எவ்வளவு வேகமாக ஆணவம் அழிகிறதோ, அவ்வளவு வேகமாக நல்ல வாழ்க்கை அமையும்.
* கருணையே உயர்வான குணம். ஆன்மிகமே மேலான ஞானம்.
* நல்லவர் நட்பும், நல்ல நுால்களும் பிறவி என்னும் கடலை தாண்டிச் செல்ல உதவும்.
* மன உறுதியை வளர்த்துக் கொள். அது பேராசை என்னும் நெருப்பில் இருந்து காப்பாற்றும்.
* பெயர், புகழ், பேராசையை விட்டால் உண்மையான அன்பை உணர முடியும்.
* எண்ணம், பேச்சு, செயல் என மூன்றிலும் துாய்மையைக் கடைபிடி.
* தேவையைக் குறை. திருப்தியாக வாழு.
* எதற்கும் பிறரை நம்பி இருக்காதே. உனது தேவையை நீயே செய்.
* பிறரது உணர்ச்சிகளை புண்படுத்தாமல் இருப்பதே ஒழுக்கம்.
* நல்லவர்கள் கூறும் கருத்துக்கு மதிப்பு கொடு.
* பழி வாங்கும் எண்ணத்தை கைவிடு.
* தவறுகளைத் திருத்திக் கொள்.
* மன அமைதிக்கு அடிப்படையான விஷயம் உடல்நலம்.
என்கிறார் சிவானந்தர்

