ADDED : நவ 24, 2017 09:36 AM

* முதலில் கீழ்ப்படிய கற்றுக் கொள். கட்டளையிடும் அதிகாரம், தானாக உன்னை தேடி வரும்.
* யார் எது சொன்னாலும் கேட்டுக் கொள். மனதிற்குச் சரியெனப் பட்டதில் துணிச்சலுடன் இறங்கு. நிச்சயம் வெற்றி பெறுவாய்.
* பிறருக்கு செய்யும் சிறு முயற்சியும் கூட பெரும் சக்தி உண்டாகும். மனதில் நல்லது நினைத்தால் கூட சிங்கத்தின் பலம் உனக்கு கிடைக்கும்.
* நம்பிக்கை, நேர்மை, பக்தி இருக்கும் வரை யாராலும் உன் முன்னேற்றத்தை தடுக்க முடியாது.
* வாழ்வில் நன்மை பெற விரும்பினால், எல்லா உயிர்களுக்கும் தொண்டு செய்.
* பொறுப்பு முழுவதையும் உன் மீது சுமத்து. தைரியமாக செயல்படு.
* துன்பம் கற்சுவர் போல குறுக்கிட்டாலும், அதை பிளந்து செல்லும் ஆற்றல் ஒழுக்கத்திற்கு உண்டு.
* எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவு. அதுவே ஆயிரம் மடங்காக மீண்டும் திரும்பி வரக் காண்பாய்.
வழி காட்டுகிறார் விவேகானந்தர்