ADDED : ஏப் 22, 2021 04:40 PM

ஏப்.21 - ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்
* நாத்திகர்கள், கொடுமையாளர்களுடன் நட்போ, உறவோ கூடாது.
* கடலில் சங்கமிக்கும் ஆறுகள் போல பக்தர்கள் கடவுளுடன் ஐக்கியம் அடைவர்.
* எங்கிருந்தாலும் கடவுளின் கண்களில் இருந்து யாரும் தப்ப முடியாது.
* நல்ல குருநாதரை சரணடைந்தால் நம் வாழ்வு சிறக்கும்.
* உண்மையான பக்தர்களின் வீட்டில் பற்றாக்குறை என்பதே இருக்காது.
* அறிவை மறைக்கும் அறியாமை என்னும் திரையை கிழித்தெறியுங்கள்.
* அகந்தையை அகற்றினால் கடவுளின் அருள் கிடைக்கும்.
* குருநாதரின் கருணை என்னும் மருந்து அறியாமையைப் போக்கும்.
* கடவுள் நம்பிக்கையை விட குருபக்தியே மேலானது.
* கடவுளை முழுமையாக சரணடைந்தால் ஆசை நெருங்காது.
* எது வேண்டுமானாலும் கடவுளிடம் மன்றாடிக் கேளுங்கள்.
* உலக விஷயங்களில் ஈடுபட்டு பெருமைப்படுவது போலி கவுரவம்.
* கடவுளின் திருவடியைச் சரணடைவதே உண்மையான கவுரவம்.
* பசித்திருப்போருக்கு இரக்கமுடன் உணவளியுங்கள்.
எச்சரிக்கிறார் ஷீரடி சாய்பாபா