sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தூங்காதே தம்பி தூங்காதே!

/

தூங்காதே தம்பி தூங்காதே!

தூங்காதே தம்பி தூங்காதே!

தூங்காதே தம்பி தூங்காதே!


ADDED : ஆக 10, 2018 08:36 AM

Google News

ADDED : ஆக 10, 2018 08:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.16 - ராமகிருஷ்ணர் நினைவு தினம்

* விழிப்புடன் இருப்பவரின் வீட்டில் திருட்டு நடக்காது. அது போல விழிப்புடன் இருக்கும் மனதில் தீய எண்ணம் நுழையாது.

* எல்லா மனிதர்களிடமும் கடவுள் இருக்கிறார். ஆனால் கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுவே சிக்கலுக்கு எல்லாம் காரணம்.

* சூரிய உதயத்திற்கு முன்பு வெண்ணெய் கடைவது போல இளமைக்காலமே ஆன்மிகத் தேடலுக்கு ஏற்றது.

* உலக ஆசைகளில் நடுவில் இருந்து கொண்டே மனதை அடக்கி ஆள்பவனே உண்மை வீரன்.

* பெண்களை உன் தாயாக கருது. அவர்களின் முகத்தைப் பார்க்காதே; பாதங்களை மட்டும் பார். பாவ எண்ணம் தோன்றாது.

* மற்றவர் குறைகளை பற்றி பேச விரும்புபவன், விலைமதிப்பற்ற காலத்தை வீணாக்குகிறான்.

* கடவுளை வெளியில் தேடுவது அறியாமை. உனக்குள்ளே அவர் இருப்பதை உணர்வதே ஞானம்.

* உன்னுடைய மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொள். அதற்காக மற்றவர் மீது வெறுப்பு கொள்ளாதே.

* பாம்பும் அதன் மேல்சட்டையும் வெவ்வேறானவை. அது போல ஆன்மாவும், உடலும் வெவ்வேறானவை.

* பழங்கள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளையும். நீ பெருமை அடைய விரும்பினால் அடக்கத்தோடும், பணிவோடும் இரு.

எச்சரிக்கிறார் குருதேவர்






      Dinamalar
      Follow us