ADDED : ஆக 10, 2018 08:35 AM

ஆக.15 - அரவிந்தர் நினைவு தினம்
* நல்ல செயல் செய்ய நினைத்தால் அதை உடனே செய்து முடித்து விடு.
* மனம், சொல், செயல் மூன்றாலும் உண்மையை கடைபிடிப்பவனே உயர்ந்தவன்.
* கட்டுப்பாடு என்பது சுதந்திரத்திற்கு முரணானது அல்ல.
* உண்மையில் சிக்கல் என்பது வெளியில் இல்லை. எல்லாம் நமக்குள் தான் இருக்கிறது.
* எந்த சூழ்நிலையிலும் மனதில் அமைதியை இழக்க அனுமதிக்காதே.
* துாய்மையான இன்பத்தை அறிந்தவர்களே கடவுளை அறிந்தவர்கள்.
* கடவுளை அடைய கலியுகத்தில் பக்தி யோகம் ஒன்றே சிறந்த வழி.
* தன் குறைகளை ஏற்று அதை திருத்திக் கொள்வதே முக்திக்கான வழி.
* உன் வேண்டுதல்களை துாரத்தில் வைத்து விட்டு கடவுளின் விருப்பம் என்ன என்பதை அறிந்து கொள்.
* பொய் என்பது மனிதனுக்கு பிறப்பால் ஏற்பட்டதல்ல. வெளியில் இருந்தே அது வருகிறது என உணர்ந்தால் அதை விட்டு விலக முடியும்.
* மனிதனுக்குள் கடவுள் இருப்பதால் தான் தெய்வீகத்தை நாடுகிறான்.
* காமத்தை வெல்லா விட்டால் உடல், மனதில் தெய்வ சக்தியை நிலை நிறுத்த முடியாது.
ஆணையிடுகிறார் புதுச்சேரி மகான்