sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சுமையைக் கண்டு துவண்டு போகாதே.. உன்னை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்!

/

சுமையைக் கண்டு துவண்டு போகாதே.. உன்னை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்!

சுமையைக் கண்டு துவண்டு போகாதே.. உன்னை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்!

சுமையைக் கண்டு துவண்டு போகாதே.. உன்னை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்!


ADDED : ஜூலை 01, 2016 10:34 AM

Google News

ADDED : ஜூலை 01, 2016 10:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்

* இளைஞனே! தன்னம்பிக்கை ஒன்றே உன் பரம்பரைச் சொத்து என்பதை மறவாதே. உன்னை சுமக்கும் பூமி கூட உன் காலடியில் தான் இருக்கிறது.

தன்னம்பிக்கையோடு கடவுள் நம்பிக்கையும் இணைந்து விட்டால் உன் வாழ்வு ஒளி மிகுந்ததாகி விடும்

* விதியை நிர்ணயிக்கும் சக்தியும், அதற்கு தேவையான ஆற்றலும், உறுதியும் உன்னிடம் நிறைந்திருக்கிறது.

* நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி விடுவாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகி விடுவாய்.

* உலகம் மிகப் பெரிய பயிற்சிக்கூடம். இங்கு நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே மண்ணில் பிறவியெடுத்து வந்திருக்கிறோம்.

* துருப்பிடித்து தேய்வதை விட உழைத்து தேய்வது மேலானது. நல்ல வழியில் பணம் சம்பாதிப்பதும் அதை சமுதாயத்திற்கு பயனுள்ள விதத்தில்

செலவழிப்பதுமே சிறந்த வழிபாடு.

* பிறருடைய பாராட்டு, பழிச்சொல் பற்றி நீ யோசிக்க ஆரம்பித்தால் உன்னால் மகத்தான செயல் எதையும் சாதிக்க முடியாது.

* இரக்கமுள்ள இதயம், சிந்தனை மிக்க மூளை, உழைக்க துடிக்கும் கைகள் இவை மூன்று மட்டுமே இன்று நாம் முன்னேறுவதற்கு அவசியமானவை.

* இயற்கையை வெல்லவே நீ இந்த உலகில் பிறந்திருக்கிறாய். அதற்குப் பணிந்து போவதற்கு அல்ல.

* உடல், மனம் இரண்டையும் பலவீனப்படுத்தும் எதையும் கனவிலும் நெருங்காதே. சோம்பேறித்தனத்தை எப்பாடுபட்டாவது துரத்திவிடு. சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்றே பொருள்.

* எண்ணம், செயல் இரண்டிலும் குறுக்கிடும் தீமைகளுடன் ஓயாமல் போரிட்டுக் கொண்டேயிரு. இதில் வெற்றி பெற்று விட்டால் அமைதி உன்னைத் தேடி வரும்.

* அனைவரும் கடவுளின் அன்பு குழந்தைகள். எதையும் சாதிக்கக் கூடிய வலிமையும், மன உறுதியும் நம் மனதிற்குள் குடிகொண்டிருக்கிறது.

* ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும். அதை அடைவதற்கு முடிந்த வரை சிறப்பான வகையில் முயற்சிக்க வேண்டும்.

* மற்றவர்கள் ஏளனம் செய்வதை சிறிதும் பொருட்படுத்தாதே. கடமைகளைச் செய்வதில் கண்ணாக இரு. சுய கட்டுப்பாடு ஒன்றே லட்சியத்தை அடைய உனக்குப் பேருதவியாக இருக்கும்.

* மனிதனை உருவாக்குவதில் இன்பமும், துன்பமும் சரி சமமான இடம் வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியராக மனிதனுக்கு வழி காட்டுகிறது.

* 'என்னால் எல்லாம் முடியும்' என்று முழுமையாக ஒருவன் நம்பினால், அனைத்தையும் சாதித்துக்காட்டும்

வல்லமையை அவன் பெறுவது திண்ணம்.

* மனதை ஒருமுகப்படுத்தக் கற்றுக் கொள். தன்னை மறந்து மன ஒருமைப்பாட்டுடன் பணி செய்யும் போது மனிதன் அழியாப்புகழை அடைகிறான்.

முழக்கமிடுகிறார் இளைஞர்களின் இதயவீரர்






      Dinamalar
      Follow us