ADDED : நவ 27, 2020 01:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தரமற்ற வார்த்தைகளை பேசாமல் இருப்பதே உண்மையான விரதம்.
* எல்லா உயிர்களையும் கடவுளாக போற்றுங்கள்.
* கடவுள் மீது பக்தி செலுத்துவதை விட ஒழுக்கம் மிக அவசியம்.
* உங்கள் உழைப்பிலேயே உண்ணப் பழகுங்கள்.
* இனிமையாகப் பேசினால் வாழ்வில் உயர்வு கிடைக்கும்.
* எப்போதும் நல்லவரோடு உறவாடுங்கள்.
* மூத்தோர்களின் அறிவுரைகள் பெரும் பொக்கிஷம்.
* பெற்றோரைக் காப்பது பிள்ளைகளின் கடமை.
* தர்மம் செய்வதில் விருப்பம் கொள்ளுங்கள்.
* நல்ல செயல்களை முன்னின்று நடத்துங்கள்.
* எந்நேரமும் சுறுசுறுப்பாக இருக்க பழகுங்கள்.
* இளமைக் காலமே கல்வி கற்க ஏற்ற காலம்.
* கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு.
* பிறருக்கு கற்றுக் கொடுப்பதே மேலும் கற்பதற்கான வழி.
எச்சரிக்கிறார் அவ்வையார்