
நவ.17 ஸ்ரீஅன்னை நினைவு நாள்
* ஒவ்வொரு நேர்மையான செயலும் அதற்குரிய வெகுமதி தரக் காத்திருக்கிறது.
* முயற்சிக்குரிய பலன் ஒருவனுக்கு நிச்சயம் கிடைத்தே தீரும்.
* மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடந்தால் வாழ்வு நலம் பெறும்.
* தொண்டு செய்வதை விட இனிய அனுபவம் வேறில்லை.
* கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை. ஏனெனில் அவர் அன்பு வடிவானவர்.
* மனம் என்பது கடவுளின் கையில் ஒரு கருவியாக இருக்க வேண்டும்.
* கடவுள் விரும்பும் வழிபாடு உழைப்பு ஒன்றே.
* உணர்ச்சி வசப்பட்டால் முடிவெடுக்க முடியாமல் தடுமாற நேரிடும்.
* கடந்ததை பற்றி வருந்தவோ, வருவது பற்றி கற்பனை செய்யவோ வேண்டாம்.
* முடிந்தளவுக்கு குறைவாக பேசுங்கள்.
* கடவுள் நம்பிக்கை ஒன்றே மனிதனுக்கு உண்மையான உதவி.
* எதைக் கண்டும் எரிச்சல்படாதீர். அனுபவ பாடமாகக் கருதுங்கள்.
* கடவுளின் விருப்பப்படி நடக்கட்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.
* கோரிக்கை எதுவும் வைக்காமல் பிரார்த்திப்பதே சிறந்த வழிபாடு.
உற்சாகமூட்டுகிறார் ஸ்ரீஅன்னை