/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
கவலைப்படாதே... தைரியமாக செயல்படு
/
கவலைப்படாதே... தைரியமாக செயல்படு
ADDED : அக் 15, 2023 09:39 AM

* கவலைப்படுவதால் எந்தப் பிரச்னையும் தீராது. அதை தீர்க்கும் முயற்சியில் இறங்கு.
* உடல் என்பது கோயிலுக்குச் சமம். அதை துாய்மையாக வைத்திரு.
* படிப்பு, பணத்தால் தற்பெருமை கொள்ளாதே. மீறினால் அது அழிவைத் தரும்.
* மனம் அமைதியாக இருந்தால் முகம் பிரகாசமாக மாறும்.
* எப்போதும் தைரியமாக செயல்படு. வெற்றி பெறுவது எளிது.
* எல்லோரிடமும் அன்பாக இரு. அதுவே மகிழ்ச்சி.
* பக்தி செலுத்துவது, ஞானத்தை அடைவது ஆகிய இரண்டும் பெருஞ்செல்வம்.
* துன்பத்தை அனுபவித்தால் மட்டுமே சுகத்தின் அருமை தெரியும்.
* நீ செய்யும் தவறை திருத்திக் கொள். அது மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்.
* அறிவுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. தினமும் அறிவை விரிவுசெய்.
* தியானத்தில் ஈடுபடு. கடவுளின் அருள் கிடைக்கும்.
* நம்பிக்கை, நல்ல செயல், ஒழுக்கம் ஆகியவை வெற்றிக்கான வழிகள்.
* தர்மம் என்பது தாய். நிர்வாகம் என்பது தந்தை.
* ஒழுக்கம், நேர்மையானவர்களால் சமுதாயம் நன்மை அடையும்.
* சுதந்திரம் இல்லாத நாடு உயிர் இல்லாத உடல்.
* கடவுளை தாயாக கருதினால் அவருக்கும் உனக்கும் இடையே நெருக்கம் கூடும்.
என்கிறார் ராஜாஜி