
* எப்போதும் கடவுளை நினை. மனம் நிம்மதியாக இருக்கும்.
* பெரியவர்களை அலட்சியப்படுத்தாதே. அவர்களின் அனுபவமே நமக்கு சொத்து.
* இப்பிறவியில் செய்யும் நன்மையை மறுபிறப்பில் அனுபவிப்பாய்.
* நியாயமற்ற வழியில் சேர்த்த பணம் பயன் தராது.
* அறிவை மேம்படுத்த நல்ல புத்தகங்களை படி.
* நீ செய்த தர்மம் உன்னை எப்போதும் பின்தொடரும்.
* துன்பம் வரும்போதுதான் உண்மையானவர்களை தெரிந்து
கொள்ள முடியும்.
* எல்லாம் தெரிந்தவரும் இல்லை. எதுவுமே தெரியாதவரும் இல்லை.
* நல்ல மனமே கடவுள் வாழும் இடம். மனதை துாய்மையாக வைத்திரு.
* கடவுளை அன்பினால் வணங்கு. அப்போதுதான் அவரது அருள் கிடைக்கும்.
* மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் பழகு.
* மானம் காக்க ஆடையும், மனதை காக்க வழிபாடும் அவசியம்.
* உனது செயல்பாடு குடும்பத்துக்கு மட்டுமல்ல. நாட்டுக்கும் பயன்தர வேண்டும்.
* பெற்றோரை விட சிறந்தவர் யாருமில்லை. முதலில் அவர்களை வணங்கு.
* அனுபவத்தால் கிடைக்கும் அறிவே மேலானது.
* எந்தவொரு செயலையும் பதறாமல் செய். அப்போது அதன் சூட்சமம் புலப்படும்.
கேட்கிறார் வாரியார்