sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர் நாள்

/

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர் நாள்

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர் நாள்

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர் நாள்


ADDED : செப் 12, 2012 12:40 PM

Google News

ADDED : செப் 12, 2012 12:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நான் பிறப்பற்றவன். எனது மகிமை மிக்க உடலுக்கு அழிவே கிடையாது. நானே கடவுள். ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்து தர்மத்தைக் காக்கிறேன், அதர்மத்தை அழிக்கிறேன். எனது பக்தர்கள் என் பாதுகாப்பில் இருக்கிறார்கள். கொடியவர்கள் என் முன்னே வரும்போதே அழிந்து போகிறார்கள். எனது பிறப்பு, செயல்கள் ஆகியவற்றில் பொதிந்து கிடக்கும் தெய்வீகத்தன்மையை யார் ஒருவன் உணர்கிறானோ, அவனுக்குப் பிறப்பு கிடையாது. அவன் என் நித்திய உலகை அடைவான்.

* மனிதன் பிறக்கிறான், இறக்கிறான். இவ்வாறு பல பிறவிகள் எடுத்தவன், இறுதியில் நானே (கண்ணனே) சகலமும் என்று என்னைச் சரணடைகிறான்.

* எனது பக்தனுக்கு அழிவே கிடையாது. என்னிடம் சரணடைந்தவர்கள் இழிபிறவியாகப் பிறந்திருந்தாலும் அவர்கள் பரமகதியை அடைவார்கள்.

* எப்பொழுதும் என்னையே நினைத்துக் கொண்டிரு. என்னைச் சரணடை. நீ என்னை வந்தடைவாய். இதை உனக்கு சத்தியம் செய்து கொடுக்கிறேன். உன்னை எல்லாப் பாவங்களில் இருந்தும் காப்பாற்றுகிறேன். உனக்கு மோட்சத்தை அளிக்கிறேன். பயப்படாதே.

* எப்படி மனிதன் நைந்து போன புதிய துணிகளை <எறிந்து விட்டு, வேறு புதிய துணிகளை அணிந்து கொள்கிறானோ, அவ்வாறே ஜீவாத்மா நைந்து போன பழைய உடல்களை நீத்துவிட்டு, வேறு புதிய உடல்களை அடைகின்றன.

* ஆத்மா ஒரு பொழுதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அது எக்காலத்திலும் இருக்கும். உடல் கொல்லப்பட்டாலும் இந்த ஆத்மா கொல்லப்படாது.

* எல்லா உயிரினங்களும் பிறப்பிற்கு முன் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. இறப்பிற்குப் பிறகும் தென்படாமலே போகக்கூடியன. நடுவில் மட்டுமே தென்படுகின்றன. பிறகு, இந்நிலையில் ஏன் வருத்தப்பட வேண்டும்?

* எவர்களை நீ உன்னைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அவர்கள் எல்லோரும் மறைவிலிருந்து வந்தவர்கள். அதாவது, பிறப்பதற்கு முன் வெளிப்படாதவர்களாக இருந்தார்கள். மறுபடியும் மறைந்து விட்டார்கள். ஆகையால், உண்மையில் இவர்கள் உனக்கு சொந்தமானவர்கள் அல்லர். நீயும் அவர்களுக்கு சொந்தமானவன் அல்ல. இதற்காகக் கவலைப்படாதே.

* அர்ஜூனா! ஆத்மா பிறப்பதுமில்லை, எக்காலத்திலும் இறப்பதுமில்லை. ஒருமுறை இருந்து பின்னர் இல்லாமல் போவதும் இல்லை. ஆன்மா பிறப்பற்றது, நிலையானது, பழமையானது. உடம்பு கொல்லப்படும், ஆனால் ஆத்மா கொல்லப்படாது. அது என்றும் உள்ளது.

* பெரியவர் என்ற மதிப்புப் பெற்றவர்கள் இகழ்ச்சிக்கு ஆளானால், அது மரணத்தைக் காட்டிலும் மிகவும் துயரத்தைக் கொடுக்கக்கூடியது.

* தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கு அதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே. தொழில் செய்யாமலும் இராதே.

யதார்த்தத்தை சொல்கிறான் கண்ணன்






      Dinamalar
      Follow us