ADDED : ஜூலை 07, 2020 11:51 AM

* தோல்வி தற்காலிகமானதே. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்.
* புதிய முயற்சியில் ஈடுபடும் போது, கடந்த கால அனுபவம் அளித்த பாடத்தை மறக்காதீர்கள்.
* தெய்வீக சக்தியை நோக்கி மனதை திருப்பினால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
* மற்றவர்களின் உடல்பலம், பணபலம் கண்டு அஞ்சாதீர்கள். வெற்றி நோக்குடன் எதிர்நீச்சல் அடிக்க முயலுங்கள்.
* கடவுளின் ஒப்பற்ற படைப்பான நம்மைப் போல வேறொருவர் உலகில் இல்லை. இதை எண்ணி பெருமைப்படுங்கள்.
* துாங்கும் முன் அன்றைய நாளில் செய்த பணிகளை பட்டியலிடுங்கள். இது உங்களை திருத்தவும், பணி குறித்து திட்டமிடவும் துணைபுரியும்.
* வேகம், விவேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இதுவே நெருக்கடி நேரத்தில் பாதுகாப்பு அளிக்கும்.
* மகான்களின் வரலாற்றை படியுங்கள். வாழ்வில் சோதனை குறுக்கிட்டாலும் துணிவுடன் அவர்கள் போராடி வென்றதை அறிய முடியும்.
* வேலைக்காக வழிபாட்டைப் புறக்கணிக்க கூடாது. பணியில் இருந்தாலும் ஆழ்மனம் கடவுளைச் சிந்திக்க வேண்டும்.
தைரியமூட்டுகிறார் பரமஹம்ச யோகானந்தர்

