ADDED : செப் 04, 2020 05:33 PM

செப்.8 - பிறந்த தினம்
* தேவைகளை குறைத்துக் கொண்டு நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு.
* தினமும் அதிகாலையில் தியானம் செய்வதை வழக்கமாக கொள்.
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தர்மவழியில் செலவிடு.
* பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தை தினமும் படித்திடு.
* தினமும் இரண்டு மணி நேரம், சாப்பிடும் போதும் மவுனத்தை கடைபிடி.
* எந்த நிலையிலும் உண்மை பேசுவதில் உறுதியாக இரு. .
* மற்றவர் உணர்ச்சிகளை புண்படுத்தாமல் அனைவரிடமும் அன்பு காட்டு.
* தவறால் கிடைத்த அனுபவத்தை மறக்காதே. உன்னையே நீயே திருத்திக் கொள்.
* துாங்கும் முன்பும், துாங்கி எழுந்த பின்பும் கடவுளை மனதார நினை.
* எண்ணம், சொல், செயலில் எவருக்கும் துன்பம் செய்யாதே.
* அநியாய வழியில் கிடைத்த பணம், பொருளை ஏற்காதே.
* பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி, சகிப்புத்தன்மையால் கோபத்தைக் கட்டுப்படுத்து.
* கடவுள் நம்மை விட்டு அகலாத உயிர்த்தோழனாக இருக்கிறார்.
* வழிப்போக்கனைப் போல உலகில் வாழ்ந்தால் ஆசைகள் குறைய தொடங்கும்.
வழிகாட்டுகிறார் சிவானந்தர்