sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஐந்து முக சிவன்!

/

ஐந்து முக சிவன்!

ஐந்து முக சிவன்!

ஐந்து முக சிவன்!


ADDED : ஜூலை 07, 2017 08:35 AM

Google News

ADDED : ஜூலை 07, 2017 08:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது தெரியும். அவர் ஐந்து முகம் கொண்டவர் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த ஐந்து முக சிவனை தரிசிக்க, நேபாள தலைநகர் காட்மாண்டிலுள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

தல வரலாறு: பசுக்கள் என்றால் உலகத்திலுள்ள உயிர்களைக் குறிக்கும். உயிர்களைப் படைத்து, காத்து, அழிக்கும் எஜமானராக இருப்பவர் சிவன். இதனால் அவருக்கு 'பசுபதி' என்ற பெயர் உண்டு. 'பதி' என்றாலும் 'நாதர்' என்றாலும் 'தலைவர்' என்று பொருள். எல்லா திசைகளுக்கும் ஒரு முகமும் மேல் நோக்கிய முகமுமாக உள்ள சிவன், உலக இயக்கம் ஒவ்வொன்றையும் கவனமாக பார்ப்பதால். அவரது பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது.

சிறப்பம்சம்: சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நான்கு கதவுகள் கொண்ட நுழைவாயில் உள்ளது. ஒவ்வொன்றின் அருகிலும் பூஜை செய்யும் பண்டாக்கள் உள்ளனர். ஆலயத்தை வலம் வரும் வழியில், பலர் ருத்ர ஜப பாராயணம் செய்வர். கருவறை இங்கு இல்லை. சிவன் எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட பெரிய நந்தி சிலை உள்ளது.

108 சிவலிங்கம்: கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றை வலம் வருவதற்கு பாதை அமைத்துள்ளனர். கோயிலின் பின்புறமாக சென்றால் பாசுமதி நதியை தரிசனம் செய்யலாம். இதில் நீராட படித்துறைகள் அமைந்துள்ளன.

இங்குள்ள படிகளின் மேல், இறந்தவர்களின் உடலை தகனம் செய்து அஸ்தியை ஆற்றுநீரில் தள்ளி விடுகின்றனர்.

அருகிலுள்ள கோயில்கள்: இந்தகோயிலின் அருகில் புத்தநீலகண்ட ஆலயம் உள்ளது. இங்கு திருமால் பாம்பு படுக்கையில் சங்கு சக்ரதாரியாக சயனநிலையில் 'புத்த நீலகண்ட்' என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். பாம்பு படுக்கையின் கீழே ஒரு தடாகம் நீர் வற்றாத நிலையில் உள்ளது.

விவசாயி ஒருவரின் கனவில் பெருமாள் தோன்றி, பூமியின் அடியில் இன்ன இடத்தில் தான் உள்ளதாகவும், இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டதால் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us