sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உன்னைக் காளியிடம் ஒப்படைத்து விடு அவள் பார்த்துக் கொள்வாள்!

/

உன்னைக் காளியிடம் ஒப்படைத்து விடு அவள் பார்த்துக் கொள்வாள்!

உன்னைக் காளியிடம் ஒப்படைத்து விடு அவள் பார்த்துக் கொள்வாள்!

உன்னைக் காளியிடம் ஒப்படைத்து விடு அவள் பார்த்துக் கொள்வாள்!


ADDED : நவ 11, 2010 04:38 PM

Google News

ADDED : நவ 11, 2010 04:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பிக்கையூட்டுகிறார் ராமகிருஷ்ணர்

* கடவுளைத் தேடுபவன் அவரை அடைகிறான். செல்வத்தையும், செல்வாக்கையும்  தேடுபவன். அவற்றை  அடைகிறான். நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைவாய்.

* ஒருவனது அகங்காரம் அவனது உடல் இருக்கும் வரை அவனை விட்டு முற்றிலும் நீங்குவதில்லை. அதன் அடையாளம் சிறிதளவேனும் எப்போழுதும் தங்கியிருக்கும்.

* ஒளியை உணர்பவன்

இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் தெரியும். குணத்தைப் பற்றி அறிந்தவன் குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.

* நம்பிக்கை கொள்.

கடவுளை நம்பி இரு. பின்னர் நீயாக எதையுமே செய்ய வேண்டியிருக்காது. அன்னை

காளி உன் பொருட்டுத் தானே அனைத்தையும் செய்வாள்.

* இறைவனை வெளியே தேடுதல் அறியாமை. தமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவு.

* கடவுள் கற்பக மரத்தைப் போன்றவர். நீ அவரிடம் வேண்டுவது உனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வரும்தான் வேண்டுவதைப் பெறலாம்.

* பாம்பின் பற்களில் விஷமிருந்தாலும் பாம்புக்கு அதனால் சிறிதும் தீங்கில்லை. அது இறப்பதுமில்லை. ஆனால், பாம்பு எதையாவது தீண்டினால் தீண்டப்பட்டதற்கு அந்த விஷம் தீங்கு செய்கிறது. எனவே, கெட்டவர்களுடன் சேராதே.

* அனைத்து உயிர்களிடமும் சமமாய்க் காட்டப்படும் அன்பு, தயை எனப்படும். இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்ற ஞானத்திலிருந்தே இந்தத் தயை உண்டாகிறது.

* மனிதன் ஒரு தலையணை உறைக்கு ஒப்பிடலாம். கருப்பு, சிவப்பு, பச்சை முதலிய பல நிறம் கொண்டவைகளாக இருக்கலாம். அவை எல்லாவற்றுக்குள்ளும் இருப்பதும் ஒரே பஞ்சு தான். அதுபோல், மனிதருள் சிலர் அழகாகவும், நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்குள்ளும் இறைவன் மட்டுமே <உறைகிறான்.

* ஒருவன் சாப்பிட்ட உணவை அவன் விடும் ஏப்பத்தின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். அதுபோல், ஒரு ஞானியை நீ அணுகினால் அவர் உடனே கடவுளைப் பற்றிய விஷயங்களைப் பேச ஆரம்பித்து விடுவார். ஆனால், உலகப்பற்றுள்ளவனோ, உலக விவகாரங்களைப் பற்றியே பேசுவான்.

* செம்பொன்னிற்கும், பித்தளைக்குமுள்ள வேறுபாடு உரைகல்லில் உரைப்பதால் தெரியவரும். அதுபோல நல்லவரையும், அல்லாதவரையும் அவரவர்களுடைய பக்தியினால் அறிய முடியும்.

* ஒருவனுக்கு உண்மைப் பக்தி தோன்றி, அவன் சாதனைகள் செய்யவிரும்பினால் பகவான் நிச்சயமாக அவனுக்குத் தகுந்த குரு ஒருவனை ஏற்படுத்துவார். அதைப்பற்றிய கவலையே வேண்டியதில்லை.

*விவேகமும்  வைராக்கியமும் இல்லாமல், வேதநூல்களைக் கற்பதால் எந்தப்பயனுமில்லை.

* உலக ஆசைகளின் நடுவில் இருந்து கொண்டே சாதனைகள் செய்து மனத்தை அடக்கி ஆள்பவனே உண்மை வீரன்.

* மனிதனுடைய மனம் தராசுக்கோல் போன்றது. இந்த மனத்தராசின் இருதட்டுகளில் இரண்டு வித எடைகள் உள்ளன. உலகத்தின் மீதும், பட்டம், பெருமை இவற்றின் மீதும் உள்ள பற்று ஒன்று. மற்றொன்று அறிவு, பற்றின்மை, கடவுளிடம் அன்பு முதலியவை.

* வெட்கம், வெறுப்பு,  அச்சம் இவை மூன்றும் நம்மிடம் உள்ள வரையில் நமக்கு ஈசுவர தரிசனம் கிடைக்காது.

* கடவுளை அடைவதற்குப் பாதைகள் பல உள்ளன. ஒவ்வொரு தரிசனமும் ஒரு மார்க்கமே ஆகும்.






      Dinamalar
      Follow us