sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தங்க மனசு !

/

தங்க மனசு !

தங்க மனசு !

தங்க மனசு !


ADDED : டிச 17, 2010 02:05 PM

Google News

ADDED : டிச 17, 2010 02:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியில் உள்ள சரயுநதியில் வெள்ளம் கடுமையாகப் பாயும். இரவாகி விட்டால் காற்றும் அதிகமாக இருக்கும். இந்த நதிக்கரையில் வாழ்ந்த மக்கள், இக்கரைக்கும் அக்கரைக்கும் செல்ல படகுகளைப் பயன்படுத்துவார்கள்.

ஒருமுறை, படகோட்டி ஒருவன் தன் படகில் ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தான். படகு நிரம்பி விட்டது. புறப்படத் தயாரான நிலையில், துறவி ஒருவர் ஓடிவந்தார்.படகோட்டியிடம்,''அப்பனே! என்னையும் ஏற்றிக்கொள். இரவாகி விட்டதால் இனி படகுகள் ஏதும் வராது. அக்கரையில் அவசரப்பணி ஒன்று உள்ளது. நான் போக வேண்டும்,'' என்றார்.

படகில் இருந்த பயணிகள் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.பயணி ஒருவன்,''படகோட்டியே! அவரை ஏற்றாதே. ஏற்கனவே பாரம் தாங்காமல் படகு உள்ளே அமிழ்ந்தது போல் தெரிகிறது. காற்றும் பலமாக இருக்கிறது. செல்லும் வழியில் படகு கவிழ்ந்தால் யார் பொறுப்பாக முடியும்! இவர் இங்கேயே இருக்கட்டும். இந்த சாமியார், இரவில் இங்கேயே தங்கினால், பனியில் ஒன்றும் உறைந்து போய்விடமாட்டார். அப்படியே <உறைந்தால் தான் என்ன! இவரது பிரிவால் எந்த பிள்ளை குட்டி கலங்கப்போகிறது,'' என்றான் பரிகாசமாக.அவனது பேச்சை துறவி கண்டுகொள்ளவில்லை. படகோட்டியிடம் பவ்யமாகப் பேசி, படகில் ஏறி விட்டார். ஒரு மூலையில் அவர் அமர்ந்து விட்டார். படகு புறப்பட்டது.பயணிகளுக்கு கடும் எரிச்சல். 'நம்மை மீறி இந்த சாமியார் ஏறிவிட்டாரே! இவரை ஏதாவது செய்தாக வேண்டும்' என கருவிக்கொண்டனர். அவரைக் கண்டபடி திட்டினர்.

துறவி அதைக் கண்டுகொள்ளவே இல்லை. தனக்கே உரிய சாந்தமான குணத்துடன் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.  ''நாம் இவ்வளவு பேசியும், அந்த சாமியார் உணர்ச்சியற்ற மரக்கட்டை போல் இருக்கிறானே! அவனை உதைப்போம்,'' என்றான் ஒரு பயணி.  பயணிகளெல்லாம் சேர்ந்து அவரை அடித் தனர். ஆழ்நிலை தியானத்திற்கு சென்றுவிட்ட துறவிக்கு இதெல்லாம் தெரியவே இல்லை. அவர் தியானத்தில் இருந்து மீளவும் இல்லை.

உடனே சிலர் தண்ணீரை அவர் முகத்தில் வாரி அடித்தனர். சிலர் அவரது தலையிலேயே தண்ணீரைக் கொட்டினர். அவர் குளித்தது போல் ஆகிவிட்டார். அப்போதும் கண் திறந்தபாடில்லை.பயணிகளுக்கு வந்ததே ஆத்திரம்!

''இவன் என்ன உணர்ச்சியில்லாத ஜடமா! இவனுக்கு இப்படி செய்தால் போதாது. பிடித்து தண்ணீருக்குள் தள்ளுவோம். செத்து தொலையட்டும்,' ' என்று ஒரு பயணி ஆவேசமாகச் சொன்னான். சொன்னதுடன் விடவில்லை. அவரது கழுத்தில் கைவைத்து தள்ளத் தயாரானான். அதுவரை பொறுத்திருந்த கடவுள் அசரிரீயாகப் பேசினார்.

''தபஸ்வியே! இப்போதே சொல்லுங்கள். உங்களைத் துன்புறுத்தும் இவர்களைத் தொலைத்து விடுகிறேன். அதற்கு அனுமதி கொடுங்கள்,'' என்றது குரல்.இதைக்கேட்டு படகில் இருந்தவர்கள் நடுங்கி விட்டனர். துறவி என்ன சொல்லப் போகிறாரோ என கலங்கினர். அசரீரியின் குரல் கேட்ட பிறகு தான், துறவி விழித்தார்.''இறைவா! இவர்களெல்லாம் என்னால் இந்தப் படகு கவிழ்ந்து விடுமோவென நடுங்கியே என்னை நதியில் தள்ளி விட பார்த்தனர். இது அறியாமல் செய்த தவறேயாகும். மேலும், இவர்கள் தங்களை யார் என உணராதவர்கள். அழிவு என்பது எல்லாருக்குமே உண்டு என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவமில்லாதவர்கள். இவர்கள் திருந்தும் வகையில், மன்னித்து அருள வேண்டும்,'' என பிரார்த்தித்தார்.அவரது வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களை மன்னித்தார் கடவுள். நமக்கு துன்பம் செய்பவர்களுக்கும் மன்னிப்பு அருளும் பக்குவம் உள்ளவரே மனிதரில் மாணிக்கமாகப் போற்றப்படுவார்.






      Dinamalar
      Follow us