/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
யுத்தம் துவங்கட்டும் ! பெண்களின் விடுதலைக்காக ! - முழங்குகிறார் பாரதியார்
/
யுத்தம் துவங்கட்டும் ! பெண்களின் விடுதலைக்காக ! - முழங்குகிறார் பாரதியார்
யுத்தம் துவங்கட்டும் ! பெண்களின் விடுதலைக்காக ! - முழங்குகிறார் பாரதியார்
யுத்தம் துவங்கட்டும் ! பெண்களின் விடுதலைக்காக ! - முழங்குகிறார் பாரதியார்
ADDED : டிச 17, 2010 02:03 PM

* மாமிச உணவு மனிதன் தனது உடல் இறைச்சியையே தின்பது போலாகும். மற்றவர்களைப் பகைத்தல், அவர்களைக் கொல்வதும் போன்றதாகும்.
* ஒரு நாட்டில் அனைத்துவிதமான குறைகளுக்கும் புத்திக் குறைவே ஆதாரம். அது படிப்புக்
குறைவினால் உண்டாகிறது. இந்தக் குறையை நீக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.
* நமது முதலாவது கடமை நம்கல்வி நிறுவனங்களில் பாரத கண்டத்தின் புராதன மகாத்மாக்களைப்பற்றி எடுத்துரைக்கும் ஆன்மிகப் பயிற்சி அளித்து இளை ஞர்களுக்குத் தேசபக்தி, சவுகரியம், ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும்.
* பெண் கல்வி தேவை என்று மனதால் நினைத்தும், வாயால் பேசிக் கொண்டு இருப்பது அறியாமை. பெண்களின் உதவி யின்றி ஒரு தேசம் எந்தவித முன்னேற்றமும் அடைய முடியாது.
* ஒரு நல்ல செயல் செய்யத் துவங்கும் முன் அதை ஆண்டுக்கணக்கில் நீட்டிக் கொண்டு செல்வதால், மற்றவர்களுக்கு அது தீராத தொல்லையாகும்படி செய்யக்கூடாது.
* மகான்கள், கவிகள், சாஸ்திரக்காரர்கள் மற்றும் நாட்டுக்கு நல்லது செய்தவர்களுடைய பிறந்ததினங்களைக் கூட்டம் நடத்திகொண்டாடுவதுடன் ஆராய்ச்சிகள்செய்வதும் அவசியம்.
* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், ஆண்கள் பெண்களிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும்.
* உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே, தேவ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் @வண்டும்.
* உலகத்தில் உள்ள நாகரிகங்கள் அனைத்திலும் இந்திய நாகரிகம் அதிக சக்தியுடையது. இது மற்ற நாகரிகத்தையும் விழுங்கி ஜீரணித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தது.
* பெண்கள் தாம் விரும்புபவரைத் திருணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொண்ட ஆணுக்குப் பெண் அடிமையல்ல. உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; உயிரிலே ஒரு பகுதியாகும். பெண் விடுதலைக்காக தர்மயுத்தம் துவங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம்.