sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அழகென்ன... அறிவென்ன...மனமென்ன...குணமென்ன...கோபம் வரலாமா ! - சாந்தப்படுத்துகிறார் சாந்தானந்தர்

/

அழகென்ன... அறிவென்ன...மனமென்ன...குணமென்ன...கோபம் வரலாமா ! - சாந்தப்படுத்துகிறார் சாந்தானந்தர்

அழகென்ன... அறிவென்ன...மனமென்ன...குணமென்ன...கோபம் வரலாமா ! - சாந்தப்படுத்துகிறார் சாந்தானந்தர்

அழகென்ன... அறிவென்ன...மனமென்ன...குணமென்ன...கோபம் வரலாமா ! - சாந்தப்படுத்துகிறார் சாந்தானந்தர்


ADDED : டிச 17, 2010 02:02 PM

Google News

ADDED : டிச 17, 2010 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளை வழிபடுவதாக கூறி உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. கடவுள் உன் ஆத்மாவாக உள்ளார். உண்மையான வழிபாடு கடவுளைத் தனது ஆத்மாவாக நம்பி உணர்ந்துக் கொள்வதாகும். அழிவற்ற, என்றைக்கும் மாறாத ஆத்மாவை என்று உணருகிறாயோ அன்று உனக்கு விடுதலை கிடைக்கும்.

* நீ கடலின் மேல்பரப்பில் உள்ள அலைகள். நான் கடலாக உள்ளேன். நான் இல்லையென்றால் அலையாகிய நீ எப்படி இருக்க முடியும். மனமாகிய அலைகளே, உன்னை நான் உலக அரங்கில் விளையாட விட்டுள்ளேன். கடல் இல்லாமல் அலைகள் இருக்க முடியாது.

* கடவுளுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்ற லட்சியத்தில் உண்மையான உறுதியான நம்பிக்கையும், உள்ளத்தூய்மையும் உனக்கு இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

* தனது கொள்கையில் உறுதியில்லாதவன் மனம் பச்சோந்திபோல் மாறிக் கொண்டேயிருக்கும். அறிவுடையவன் தனது நல்ல செயலிலும், கெட்ட செயலிலும் தனது கொள்கையில் உறுதியாக இருப்பான்.

* உண்மையான ஆத்மாவை அறிந்து அனுபவிக்க கடவுள் நல்ல உடம்பைக் கொடுத்துள்ளார். ஆன்மா அறிந்துக் கொண்டால் மற்றவை அனைத்தும் உனக்கு மறு பிறவிகளை உண்டாக்கும்.

* ஆன்மாவில் கடவுளைக் காண பிறந்துள்ளோம். கடவுளை வெளி உலகிலோ, புத்தகத்திலோ காணமுடியாது. கடவுளை ஆன்மாவாக காண வேண்டுமானால் உள்ளத்தூய்மை வேண்டும். இதற்காக தியானத்தை மேற்கொள்ள வேண்டும்.

* உன்னிடம் அழகு, அறிவு, குணம், மனம் எல்லாம் இருந்தாலும் கோபம், பொறாமை,  வஞ்சனை,சூதுவாது ஆகியவையும் உள்ளன. இதனால் உனக்குள்ளிருக்கும் கடவுள் வெகு தூரத்தில் இருப்பது போன்ற பாவனையை உண்டாக்குகிறது.






      Dinamalar
      Follow us