sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நல்ல காலம் வரும்! உன் கடமை வரும்

/

நல்ல காலம் வரும்! உன் கடமை வரும்

நல்ல காலம் வரும்! உன் கடமை வரும்

நல்ல காலம் வரும்! உன் கடமை வரும்


ADDED : செப் 22, 2023 10:30 AM

Google News

ADDED : செப் 22, 2023 10:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உனக்கேற்ற நல்ல காலம் வரும். அப்போது தான் முயற்சியில் வெற்றி பெறுவாய். அதுவரை பொறுமையாக இரு.

* வாழ்க்கை என்றால் இன்பம், துன்பம் இருக்கத்தான் செய்யும். அதை கடந்து செல்.

* கேட்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று நம்பாதே.

* நீ செய்யும் செயல்கள் அனைத்தும், நிழல்போல உன்னை தொடரும்.

* மனதில் இருப்பதை சொல். இல்லாவிட்டால் மவுனமாக இரு.

* ஒரு விஷயத்தை யார் சொல்கிறார் என்பதைவிட, அவர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம்.

* பிறரிடம் உள்ள குறைகளை பார்க்காதே. உன்னிடம் உள்ள குறைகளை கவனி.

* உன்னை நேசிக்க கற்றுக்கொள். பிறரை வெறுக்கமாட்டாய்.

* எண்ணத்தால் கூட பிறருக்கு தீங்கு செய்ய நினைக்காதே.

* நல்ல மனிதனாக வாழ்ந்தால் இயற்கையே உனக்கு துணை நிற்கும்.

* ஆசையே துன்பத்திற்கு காரணம். முடிந்தவரை அதை தவிர்த்திடு.

* உலகில் எப்போதும் உண்மை ஒன்றே நிலைத்திருக்கும்.

* தன்னிடம் உள்ள அதிகாரத்தால் காரியம் சாதிப்பவன் நல்ல மனிதனாகவோ, நீதிமானாகவோ இருக்க முடியாது.

* எதிரிக்கும் நல்லதை செய். உனக்கு நன்மை வரும்.

* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே நீ அறிஞனாக முடியாது.

* தக்க சமயத்தில் உனக்கு உதவி செய்பவனே நண்பர்களில் சிறந்தவன்.

* மனதை கட்டுப்படுத்து. இல்லையென்றால் அது உன்னை கட்டுப்படுத்தும்.

என்கிறார் புத்தர்






      Dinamalar
      Follow us