sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தைப்பூச நன்னாளிலே...

/

தைப்பூச நன்னாளிலே...

தைப்பூச நன்னாளிலே...

தைப்பூச நன்னாளிலே...


ADDED : ஜன 22, 2021 02:12 PM

Google News

ADDED : ஜன 22, 2021 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன.28 - தைப்பூசம்

தைப்பூச நாளின் சிறப்பு

பூச நட்சத்திரம் கடக ராசிக்கு உரியது. இந்த ராசியின் அதிபதி சந்திரன். தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் இருப்பார். இந்த சமயத்தில் சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வர். சிவனின் அம்சமாக சூரியனும், அம்பிகையின் அம்சமாக சந்திரனும் உள்ளனர். இதனால் சிவனும், சக்தியும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொள்ளும் தைப்பூச நாளில் வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும். சிவன், பார்வதி, முருகன் மூவருக்கும் உரிய நாள் தைப்பூசம்.

இயற்கை வழிபாட்டு நாள்

தைப்பூச நாளில் தான் உலகம் படைக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் இந்நாளில் தோன்றின. இவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிவ பார்வதியை இந்நாளில் வழிபட்டனர். சக்தியும், சிவனும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனதும் தைப்பூசத்தன்று தான். முருகனால் அசுரர்கள் அழிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, பார்வதி முருகனுக்கு தன் சக்தியை திரட்டி, இந்நாளில் வேல் வழங்கினாள். இதனால் முருகனுக்குரியதாக மாறியது. பூச நட்சத்திரத்தில் தான் வள்ளியை முருகன் திருத்தணியில் திருமணம் செய்தார்.

கிரிவலப்பாதை

கான்கிரீட்டால் ஆன பழநி கிரிவலப் பாதையின் துாரம் 2 கி.மீ., இப்பாதையில் பஞ்சமுக விநாயகர், மதுரை வீரன், சன்னியாசியப்பன், அழகு நாச்சியப்பன் கோயில்களும், நாதஸ்வர இசைப்பள்ளி, மாணவர் இல்லம், சண்முக விலாசம், நந்தனார் விடுதியும் உள்ளன. மலை சுற்றுவோர் வேகமாக நடப்பது கூடாது. பவுர்ணமியன்று காலை, மாலையில் வலம் வந்தால் நோய் தீரும்.

கந்தன் என்பதன் பொருள்

'கந்தன்' என்னும் சொல்லுக்கு 'பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவர்' என்பது பொருள். மனமே நமக்குப் பகையாக இருக்கிறது. இதனிடம் இருந்து நம்மைக் காப்பவன் கந்தன். 'கந்து' என்றால் 'யானையைக் கட்டிப்போடும் தறி'. உயிர்கள் என்னும் யானைகளை எல்லாம் ஆசைகளில் இருந்து மீட்டு கட்டுபவன் என்பதால் அவர் 'கந்தன்' ஆனார். 'கந்து' என்ற சொல்லுக்கு 'பற்றுக்கோடு' என்றும் பொருளுண்டு. கந்தனின் பாதங்களைப் பற்றினால் பிறவிச்சுழலில் இருந்து தப்பிக்கலாம்.

வீடு 1 கோயில் 2

முருகனின் படை வீடுகள் திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகியவை. பழநி மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. மற்ற படை வீடுகளில் ஒரு முருகன் கோயில் மட்டுமே உள்ளது. பழநியில் மட்டும் இரண்டு கோயில்கள் உள்ளன. மலையடிவாரத்தில் ஒன்றும், மலையில் ஒன்றும் உள்ளன. அடிவாரக் கோயிலை 'ஆதி கோயில்' என்பர்.

செவ்வாய் தோஷம் அகல...

செவ்வாய்க்குரிய தலமான பழநியில் முருகன் சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. மேற்கு நோக்கிய கோயில்களுக்கு சக்தி அதிகம். 42 துாண்கள் கொண்ட பாரவேல் மண்டபம் இங்குள்ளது. சுக்கிரனின் எண் 6. 42 இன் கூட்டுத்தொகை 6. பாரவேல் மண்டபத்தில் நின்று, வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும். செல்வம் சேரும். இங்கு வழிபடுவோருக்கு செவ்வாய் தோஷம் விலகி திருமணம் கைகூடும்.

வரம் தருவாய் முருகா...

விநாயகருக்கும், முருகனுக்கும் நடந்த போட்டியில் சிவன், பார்வதியைச் சுற்றி வந்து விநாயகர் பரிசைப் பெற கோபம் கொண்ட முருகன் மயில் வாகனத்தில் தெற்கு நோக்கி புறப்பட்டார். நெல்லிவனமான பழநியில் தங்கினார். ஏற்கனவே அங்கு மகாலட்சுமி, பூமாதேவி, காமதேனு, சூரியன், அக்னிதேவன் ஆகியோர் முருகனின் அருளைப் பெறுவதற்காக தவ வாழ்வில் ஈடுபட்டு வந்தனர். முருகனைத் தரிசித்த அவர்கள் குறை நீங்கப் பெற்றனர். அதனால் இத்தலம் 'திரு ஆவினன்குடி' என பெயர் பெற்றது. 'திரு' மகாலட்சுமியையும், 'ஆ' காமதேனுவையும், 'இனன்' சூரியனையும், 'கு' பூமாதேவியையும், 'டி' அக்னிதேவனையும் குறிக்கிறது. திருஆவினன்குடி கோயில் முருகனிடம் வரம் பெற்ற இவர்களுக்கு முருகனுக்கு அருகிலேயே சன்னதி உள்ளது. அருகில் சரவணப் பொய்கை தீர்த்தமும் உள்ளது.

பழநி மலை உயரம்

கொடைக்கானல் மலை, மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வராகமலைக்கு நடுவே கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது பழநிமலை. மலைக்குச் செல்ல 697 படிக்கட்டுகள் உள்ளன. மலைக்குச் செல்ல படிக்கட்டு பாதை, யானைப்பாதை, விஞ்ச், ரோப்கார் உள்ளன. யானைப்பாதையின் ஆரம்பத்தில் கருப்பசாமி சன்னதியில் வழிபட்ட பின்னரே மலையேற வேண்டும். மலையின் பின்புறம் திருமஞ்சனப்பாதை உள்ளது. 'திருமஞ்சனம்' என்றால் அபிஷேகம். அபிஷேக தீர்த்தத்தை இந்தப் பாதையில் கொண்டு செல்வதால் யாரையும் அனுமதிப்பதில்லை.

காவடி சுமந்த முதல் பக்தர்

பொதிகை மலைக்கு வந்த அகத்தியர் கைலாயத்திலுள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைத் தன் வழிபாட்டுக்காக கொண்டு வர விரும்பினார். தன் சீடரான இடும்பாசுரனிடம் இப்பணியை ஒப்படைத்தார். இடும்பனும், தன் மனைவி இடும்பியுடன் சென்று, சிகரங்களை காவடியாக தோளில் சுமந்து வந்தான். அதை தன் இருப்பிடமாக்க விரும்பிய முருகன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். இடும்பன் பழநியை வந்தடைந்ததும், அந்த மலைகளை கீழே வைத்து விட்டு இளைப்பாறத் தொடங்கினான். அப்போது முருகன் சிறுவன் வடிவில் சிவகிரியான பழநி மலைக்குன்றின் மீதேறி தனக்கே உரியது என்று கூறினார். வெகுண்டு எழுந்த இடும்பாசுரன் சிறுவனைத் தாக்க முயன்று இறந்தான். குருநாதரான அகத்தியரின் உதவியை இடும்பனின் மனைவியான இடும்பி நாடினாள். சிவகிரியில் வீற்றிருக்கும் சிறுவன் முருகப்பெருமான் என்பதை உணர்ந்த அகத்தியர், தன் சீடருக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு வேண்டினார். முருகனும் இடும்பனுக்கு உயிர் கொடுத்ததோடு பழநிமலையின் காவலனாகவும் நியமித்தார். இதன் பின்னரே முருகன் அடியார்களும் இடும்பன் போல காவடி சுமக்கும் முறையை உருவாக்கினர்.






      Dinamalar
      Follow us