sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலவிருட்சங்கள் - 24

/

தலவிருட்சங்கள் - 24

தலவிருட்சங்கள் - 24

தலவிருட்சங்கள் - 24


ADDED : அக் 27, 2023 11:32 AM

Google News

ADDED : அக் 27, 2023 11:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பை பிரம்மதேசம் கைலாசநாதர் - இலந்தை மரம்

பிரம்மாவின் பேரனான உரோமச முனிவர் பிரம்மஹத்தி தோஷத்தால் அவதிப்பட்டார். விமோசனம் பெற வேண்டி திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இறுதியாக பிரம்மதேசம் என்னும் இலந்தை வனத்திற்கு வந்தார். அங்கிருந்த ஒரு இலந்தை மரத்தடியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டார். தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அபிஷேகம் செய்து தினமும் வழிபட்டார். தோஷம் விலகத் தொடங்கியது. உரோமச முனிவர் வழிபட்ட சிவனே இக்கோயிலில் கைலாசநாதராக சந்தனக் காப்பில் இருக்கிறார்.

'ஓம்' வடிவில் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிவலிங்கம் இங்குள்ளது. ஆண்டுக்கு இரு முறை நடராஜரை வழிபடும் விதமாக சூரியன் கதிர்களை பரப்புவதும், ராஜ கோபுரத்தின் நிழல் தீர்த்தக் குளத்தில் விழுவதும் இக்கோயிலின் சிறப்பம்சம். சேர, சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.

பிரம்மாவின் பேரனுக்கு தோஷம் நீங்கிய தலம் என்பதால் பிரம்மதோஷம் என்றும், மூலவர் சிலையை பிரம்மா பிரதிஷ்டை செய்ததால் அயனேஸ்வரம் என்றும், குழந்தை வரம் தருவதால் வரம் தேசம் என்றும் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்றும் இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு.

குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் இலந்தை பழத்தை பிரசாதமாக சாப்பிடுகின்றனர். சிவபெருமானின் முன்புள்ள ஏழடி உயர நந்திக்கு அருகம்புல் மாலை சாத்துகின்றனர். நந்தியின் அருளால் குழந்தை வரம் பெற்றவர்கள் நந்தியின் பெயர்களைக் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர்.

சுயம்பு மூர்த்தியாக சிவன் காட்சியளித்த இலந்தை மரமே இங்கு தலவிருட்சம். குழந்தை வரம் தரும் இந்த மரம் உடலுக்கு குளிர்ச்சியும், சுவையான பழங்களையும் தருகிறது. ஜிஜிபஸ் ஜுஜிபி என்னும் தாவரவியல் பெயர் கொண்ட இது ரேம்நேசியே குடும்பத்தைச் சார்ந்தது.

சித்தர் போகர் பாடிய பாடல்

இலந்தையின் பேர்தனையே யியம்பக்கேளு

யெழிலான கொடுக்கும் பதரிகோலந்

தலந்தை உயாஸ்தவவிம்பேன லம்பலமுமாகுந்

தாக்கான கரத்தா பதமுமாகுங்

கலந்தையாங் கத்துசிம் பிரணாமாகுந்

கனமான புராதன சத்திரசாமா

நிலந்தையா மித்தச்ச மதுரமாகும்

நேரான யிலந்தையுட நேர்மையாமே.

கொடுக்கம், பதரி கோளம், உயாஸ்தம்பம், விம்பேன நம்பளம், கரத்தாமதம், கத்துசிம்பரணம், புராதன சித்தரம், தச்ச மதுரம் என இலந்தை மரத்தின் பெயர்களாக போகர் குறிப்பிடுகிறார்.

சித்தர் அகத்தியர் பாடிய பாடல்

வேருக்கா யாசம் விலகும் பசியுண்டாம்

சீரொத் திடுமிலைக்குச் சீழ்மூலம் - சோரிவிழல்

மேவெரிச்ச லுங்கடுப்பு மேகபித்த மும்போகுந்

தாவும் விழியாயிலந்தை.

வேரை கஷாயம் செய்து குடிக்க சோர்வு நீங்கும். பசி உண்டாகும். இலையை கஷாயம் செய்து சாப்பிட ரத்தப்போக்கு கட்டுப்படும். மூல நோய் தீர இலை, பட்டையை கஷாயம் செய்து குடிப்பது நல்லது. இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் மார்புச்சளி மறையும். இலந்தை இலைகளை அரைத்து தடவினால் ஆசனவாய் அரிப்பு, சொறி, உடல் எரிச்சல் நீங்கும்.

கொண்டையா மிலந்தையைக் கொள்வேத்

திறத்திலும்

மண்டிய நோயெலா மாய்ந்து போய் விடுமே

இலந்தை பழங்களை சாப்பிட்டால் உடல் எரிச்சல், கடுப்பு, மேக நோய் நீங்கி, உடல் சூடு தணியும்.

சித்தர் தேரையர் பாடிய பாடல்

பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி

மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் - மெத்த

உலர்ந்த வெறும் வயிற்றி லுண்டால் எரிவாம்

இலந்தை நெறுங்கனியை யெண்.

இலந்தை பழங்களை கொட்டை நீக்கி சதையை அரைத்து அடையாகச் செய்து சாப்பிட பித்த மயக்கம், வாந்தி நீங்கும். இலந்தை அடையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் உண்டாகும்.

விதை நீக்கிய இலந்தை பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, அடையாக தட்டி, காய வைத்து தினமும் ஒரு துண்டு சாப்பிட பசி உண்டாகும். மாந்தம் நீங்கும். உடம்பு வலிக்கு பட்டை, இலையை கொதிக்க வைத்து அந்த நீரில் குளிக்க வேண்டும்.

வேர் கட்டையிலிருந்து தைலம் எடுத்துத் தடவினால் தோலில் தோன்றும் வெண்புள்ளிகள் மறையும்.

எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 9:30 மணி; மாலை 5:30 - 7:30 மணி

தொடர்புக்கு: 94428 94094

தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567






      Dinamalar
      Follow us