sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நல்வாழ்த்து நான் சொல்வேன்... நல்லபடி வாழ்கவென்று...

/

நல்வாழ்த்து நான் சொல்வேன்... நல்லபடி வாழ்கவென்று...

நல்வாழ்த்து நான் சொல்வேன்... நல்லபடி வாழ்கவென்று...

நல்வாழ்த்து நான் சொல்வேன்... நல்லபடி வாழ்கவென்று...


ADDED : மே 11, 2016 02:22 PM

Google News

ADDED : மே 11, 2016 02:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தினமும் காலையில் எழுந்ததும் 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்று மனதாரச் சொல்லி அனைவரையும் வாழ்த்த வேண்டும். இந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்திற்கே நன்மை தரும்.

* பிறரை வாழ்த்தும் மனம் படைத்தவர்கள் செல்லும் இடம் எல்லாம் நன்மையே உண்டாகும். அவர்களால் தீயவர்களும் கூட நல்லவராக மாறி விடுவர்.

* உள்ளத்தில் உறுதி இருந்தால் உலகமே உங்கள் கைவசம் வந்து விடும். எண்ணத்தில் ஒழுங்கு இருந்தல் எண்ணியதெல்லாம் சிறப்பாக நடந்தேறும்.

* உணவின் சக்தி உடலுக்குள் மட்டுமே பாயும். எண்ணிய எண்ணமோ உலகெங்கும் பாயும் சக்தி படைத்தது.

* எல்லா உயிர்களிடத்திலும் கடவுளைக் காண வேண்டும். இப்படிப்பட்ட உயர்நிலையைப் பெற நாம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் மனதைப் பொறுத்தது. மனதை அடக்க நினைத்தால் அலையும். ஆனால், அறிய நினைத்தால் படிப்படியாக அடங்கும்.

* நற்செயல்களில் ஈடுபட்டு அதனால் உலக மக்கள் பயனடைவதைக் காண்பவர்க்கே மனநிறைவு கிடைக்கும். அந்த நிலையில் மக்கள் வாயார வாழ்த்துவது தான் உண்மையான புகழாகும்.

* தனிமனிதனின் வாழ்வு அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தால் சமுதாயம் முழுவதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

* நாம் அனைவரும் சமுதாயத்தின் உதவியுடன் தான் வாழ்கிறோம். அதற்கு நன்றிக்கடனாக நம்முடைய உடலாலும், அறிவாலும் சமுதாயத்திற்கு தொண்டு செய்ய வேண்டும்.

* உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம் இந்த மூன்றும் தான் நல்லவர்களின் அடையாளங்கள்.

* கடமையறிந்து செயலாற்றினால் சமுதாயத்தில் உள்ள அனைவரின் உரிமைகளும், நலன்களும் முழுமையாகக் காக்கப்படும்.

* மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, சரியான ஓய்வு இவற்றை பின்பற்றினால் நோய் இல்லாமல் உடல் நலத்துடன் வாழ முடியும்.

* அன்பு, அருள், இன்முகம் இவற்றோடு கூடிய நல்லவர்களின் படங்களை வீட்டில் வையுங்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

* ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் பணியில் ஈடுபடுங்கள். குறிக்கோளை நோக்கி செயல்படுங்கள். வாழ்வில் உயர்வு பெறுவீர்கள்.

* உலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் செயலாகவே விளங்குகிறது. இதை மனிதன் உணர்ந்து இயற்கையை மதித்து வாழ வேண்டும்.

* கடவுள் என்னும் பேரருட்சக்தி, நம்மை எல்லா நேரத்திலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் வழிநடத்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

வாழ்த்துகிறார் வேதாத்ரி மகரிஷி






      Dinamalar
      Follow us