/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான் - தேஜோமயானந்தர்
/
மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான் - தேஜோமயானந்தர்
மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான் - தேஜோமயானந்தர்
மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான் - தேஜோமயானந்தர்
ADDED : பிப் 04, 2011 02:33 PM

* ஒழுக்கப் பயிற்சியைக் கடைபிடிப்பதுடன், நடைமுறையாக்கி கொண்டால் பல பண்புகள் நமது கட்டுப்பாட்டுக்குள் வரும். இதனை தினசரி கடமையாகச் செய்தால் படிப்படியாக வெற்றி பெற்று மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
* உடல், புலன்கள், மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறமுடியும்.
*நற்பண்புகளை பற்றி பேசுவதால் பயனில்லை, மாறாக அவற்றை வாழ்க்கையில் கடைபிடித்து நடக்க வேண்டும்.
* வாக்குறுதி அளித்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். எதை கூறினாலும், அது உண்மையானதாக இருக்க வேண்டும். அதற்காக எது உண்மையோ அதனை பேச வேண்டும்.
* உயர்ந்த பொருளைப் பெற அதிகபட்ச விலையைக் கொடுக்க வேண்டும். அதுபோல் ஒருவன் மேல்நிலையை அடைய தன்னிடமுள்ள இழிந்த குணங்களைக் கைவிட வேண்டும்.
* உலகில் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகின்றன. அதனால் அவற்றை கொல்லவோ, துன்புறுத்தவோ, துக்கப்படச் செய்யவோ நமக்கு தார்மீக உரிமையில்லை.
* வாழ்க்கையில் கட்டுப்பாடு, ஒழுக்கம் இருந்தால் உயர்வடைய முடியும். ஒழுக்கப் பயிற்சியை தவறவிட்டால் வெற்றி பெற இயலாது.
* மற்றவர்கள் செய்வதைப் பற்றியோ செய்யாததைப் பற்றியோ ஆராய்ந்து கொண்டிருக்காமல், உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாயிருங்கள்.
* வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் எந்தவிதமான பொறுப்புகளை ஏற்க வேண்டியிருந்தாலும், தடுமாறாமல் அதில் மனதைப்பதிந்து நிறைவேற்ற வேண்டும்.
* நமது கடமையில் அக்கறையில்லாமல் அவற்றை மறந்து விடுகின்ற போதுதான், நமக்குள் கேடு தலை தூக்குகிறது.
* கடமை மீதான முழு ஈடுபாடு மனத்தூய்மையை அளிப்பதுடன், முழுமையான மன நிறைவையும் அகமலர்ச்சியையும் அளிக்கிறது.
* எந்ததொழிலைச் செய்தாலும், நேர்மைப்பற்றுடன் அணுகி, கடவுளுக்கு ஆற்றுகின்ற வழிபாடாகக் கருதி, அர்ப்பணிப்புடன் நம்மை ஒப்படைத்துச் செய்து முடிக்க வேண்டும்.
* பிறருக்கு தியாகம் செய்ய வேண்டுமே தவிர, தமது சொந்த வசதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், தமது நோக்கங்களை அடைவதற்காகவும், மற்றவர்களைப் பலியிடக் கூடாது.
* பிறரை பாதுகாத்து உதவிபுரிய தனது சொந்த வசதிகளையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும், தன் உயிரையும் தியாகம் செய்பவர் பெருமகனாகப் போற்றப்படுகிறான்.
* மாணவர்கள் தமது விதியையும், தேசத்தின் தலைவிதியையும் உருவாக்குபவர்களாகத் திகழ வேண்டும். இதைச் செய்து விட்டால் அவர்கள் எதையும் நடத்திக்காட்டும் குணத்தைப் பெற்று விடுவார்கள். இது அவர்களுடைய மாபெரும் பொறுப்பாகும்.
* தொண்டு செய்வது என்பது ஒரு குறிப்பிட்ட செயலில் மட்டும் இல்லாமல், முழு வாழ்க்கையிலும் பரவியிருக்க வேண்டிய மனப்பான்மையாகும்.