sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கண்ணிலே அன்பிருந்தால்... கல்லிலே தெய்வம் வரும்!

/

கண்ணிலே அன்பிருந்தால்... கல்லிலே தெய்வம் வரும்!

கண்ணிலே அன்பிருந்தால்... கல்லிலே தெய்வம் வரும்!

கண்ணிலே அன்பிருந்தால்... கல்லிலே தெய்வம் வரும்!


ADDED : மார் 15, 2016 02:36 PM

Google News

ADDED : மார் 15, 2016 02:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தில் மகிழ்ச்சி இருந்தால் உதட்டில் இனிய வார்த்தைகள் வெளிப்படும். கண்ணிலே அன்பு நிறைந்திருந்தால் கற்சிலையில் தெய்வம் அருள்புரிவதைத் தரிசித்து மகிழலாம்.

* முழுமையான அன்பு, அறிவு, ஆற்றல் நிறைந்த பரம்பொருளின் அம்சமாக நீங்கள் இருக்கிறீர்கள். உலக உயிர்களுக்கெல்லாம் இயன்ற

நற்பணிகளைச் செய்யுங்கள்.

* தளர்ச்சி, வருத்தம், சந்தேகம் போன்ற கீழான எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காதீர்கள். மனம் என்னும் மாளிகையின் மூலை முடுக்கெல்லாம் அன்பு, அமைதி, பொறுமை போன்ற நற்குணங்களை நிறையுங்கள்.

* ஒருமுகப்பட்ட மனதுடன் எந்த செயலில் ஈடுபட்டாலும் மகிழ்ச்சி, வெற்றி ஆகியவற்றை அடைய முடியும். ஆனால் மனக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது.

* ஒரு நாளிலோ அல்லது தற்செயல் நிகழ்வாகவோ மன உறுதியை உங்களால் அடைய முடியாது. முறையான பயிற்சியும், விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே மனதை சீர்படுத்த முடியும்.

* எந்த நிலையிலும் மற்றவருடைய உதவியை எதிர்பார்ப்பது கூடாது. சொந்தக் கால்களில் நின்று பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவனே சிறந்த வெற்றியாளனாகத் திகழ்வான்.

* தூய்மையான மனம் மனிதனை சுதந்திரமாக வாழ வைக்கும். கட்டுப்பாடற்ற நிலையில் இருக்கும் தூய்மையற்ற மனமோ மனிதனை அடிமையாக்கி விடும்.

* உறவினர், நண்பர்கள் செய்யும் உதவியை விட ஒருவனுக்கு அதிகமான உதவிகளை மனம் செய்து விடும். அதனால் புத்தியுள்ளவர்கள் மனதைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

* போர் வீரன் எதிரியிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க மார்புக் கவசத்தை நம்புவதைப் போல, நெறிப்படுத்தப்பட்ட மனம் என்னும் கவசம் புலன்கள் என்னும் திருடர்களிடம் இருந்து மனிதனைக் காப்பாற்றும்.

* மனம் அலை பாயும் தன்மை கொண்டது. அதன் வேகத்தை தணியச் செய்து தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும். கடவுளின் திருவடியை மட்டும் சிந்தித்தால் மனம் புனிதமடைந்து எல்லையில்லா இன்பம் பெறும்.

* 'கடவுளின் அன்பு என் மூலமாக வெளிப்படும் விதத்தில் செயல்படுவேன். எப்போதும் திறந்த மனநிலையோடு இருப்பேன்'' என்று

உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள்.

* வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் வருத்தப்படக் கூடாது. 'எந்த பிரச்னை குறுக்கிட்டாலும் அவற்றை முறியடிக்கும் பலம் எனக்கு இருக்கிறது'' என்று தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

* பிறர் அவமதிக்கும் போதும், உங்கள் மீது தவறு சுமத்தும் போதும் கடவுள் உங்களுக்கு பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்னும் உயர்ந்த பாடங்களை கற்பிக்கிறார் என்று உணருங்கள்.

* கடவுளுடைய தீர்ப்பில் எந்த தவறும் இருக்காது என்ற உண்மையை உணருங்கள். யாரையும் எந்த சூழ்நிலையிலும் குறை சொல்லும் எண்ணம் உண்டாகாது.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். நற்செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்களைச் சார்ந்த மற்றவர்களுக்கும் உதவிக் கரம் நீட்டுங்கள்.

சொல்கிறார் பரமானந்தர்






      Dinamalar
      Follow us