sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

திருப்பதியில் இதெல்லாம் பார்த்தாச்சா!

/

திருப்பதியில் இதெல்லாம் பார்த்தாச்சா!

திருப்பதியில் இதெல்லாம் பார்த்தாச்சா!

திருப்பதியில் இதெல்லாம் பார்த்தாச்சா!


ADDED : மே 27, 2011 09:51 AM

Google News

ADDED : மே 27, 2011 09:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''திருப்பதிக்கு போனோமா! வெங்கடாஜலபதியை க்யூவில் நின்று தரிசித்தோமா! ஊரைப் பார்த்து வந்தோமா!'' என்று தான் இத்தனை நாளும் இருக்கிறோம். அங்கு தெரியாத சில விஷயங்கள், பார்க்காத சில இடங்களைப் பற்றி தெரிந்து கொண்டால், இனி அங்கு செல்லும்போது, பயனுள்ளதாக இருக்குமே!

பூஜைக்கு நேரமாச்சு!

திருமலை என்று போற்றப்படும் திருப்பதியில், ராமானுஜர் தங்கியிருந்த காலத்தில் ராமாயணச் சொற்பொழிவு நடத்திவந்தார். அதில் கலந்து கொண்டவர் திருமலைநம்பி. இவர் ராமானுஜரின் தாய்மாமன். இவர், தினமும் அடிவாரத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து குடத்துடன் மலைமீது ஏறி வெங்கடேசப் பெருமாளுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் ராமாயணம் கேட்டதால் மலையேற தாமதமாகி விட்டது. நம்பி மிகவும் வருந்தினார். ஆனால், அந்த இடத்திலேயே வெங்கடேசப்பெருமாள் காட்சியளித்து தன்னைப் பூஜிக்கும்படி கட்டளையிட்டார். அடிவாரத்தில் 'ஸ்ரீபாத மண்டபம்' என்னும் பெயரில் இந்த இடம் அமைந்துள்ளது. அங்கு மூலவராக எளிய கோலத்தில் வெங்கடேசப்பெருமாள் காட்சியளிக்கிறார். மலை ஏறும் பக்தர்கள் ஸ்ரீபாதமண்டபத்தில் பெருமாளின் திருவடி தரிசனம் பெற்ற பின்னரே படியேறத் தொடங்குவது வழக்கம். இந்த அடிவாரப்பகுதிக்கு 'அலிபிரி' என்று பெயர்.

***

அடிவார சிவன் கோயில்

திருப்பதி அடிவாரத்தில் இருக்கும் ஆழ்வார் தீர்த்தத்தில், கபில முனிவர் தவம் செய்து சிவபார்வதியின் அருள்பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதனால், இத்தீர்த்தத்திற்கு கபிலதீர்த்தம் என்றும் பெயருண்டு. தீர்த்தக்கரையிலுள்ள சிவன் கோயிலில் கபிலேஸ்வரர் அருள்பாலிக்கிறார். காமாட்சியம்மன், விநாயகர், குமாரசாமி (முருகன்), தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் இக்கோயிலில் சந்நிதிகள் உண்டு. பிதுர் வழிபாட்டுக்கு உகந்ததாக கபிலதீர்த்தம் கருதப்படுகிறது.

***

கண்ணுக்கு 'பூ' காதுக்கு 'பா'

வெங்கடாஜபதிக்கு, யமுனைத்துறை மண்டபத்தில் இருந்து காலையில் இரு அர்ச்சகர்கள் கூடை நிறைய பூமாலைகளைச் சுமந்துவருவர். அவர்கள் முன் டமாரம் அடித்தபடி ஊழியர் ஒருவர் வருவார். அவருக்குப் பின் பள்ளியெழுச்சி பாடும் இருவர், திருப்பாவை பாடும் இருவர், மந்திரம் சொல்லும் இருவர் என்று ஆறுபேர் வருவர். பெருமாளுக்கு அணிவிக்கும் பூ அலங்காரத்தைப் பார்க்க பக்தர்கள் அதிகளவில் காத்து நிற்பர். முதலில் மார்பில் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்கு பூஅலங்காரம் நடைபெறும். பின் தோள்மாலை என்னும் மாலையை பெருமாளின் இருதோள்களிலும் அணிவிப்பர். இது பெருமாளின் கிரீடம் முதல் பாதம் வரை நீண்டிருக்கும். இந்த தரிசனத்திற்கு 'தோமாலா சேவா' என்றே பெயர். அர்ச்சகர்கள் பூ சாத்தும்போது திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, சூக்தமந்திரம் ஓதப்படும். பக்தர்களின் கண்ணுக்கு விருந்தாக 'பூ' அலங்காரமும், காதுக்கு விருந்தாக'பா' சுரப் பாடல்களும் அமையும்.

***

கண்ணாடியில் தரிசனம்

வெங்கடேசப்பெருமாளின் அபிஷேகத்திற்காக ஆகாச கங்கையில் இருந்து நாள்தோறும் மூன்று குடம் தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. காலை, மாலை, இரவு பூஜையின்போது இத்தீர்த்தம் பயன்படுத்தப்படும். பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் தீர்த்தம் யானைமீது வைத்துக் கொண்டுவரப்படும். மற்றநாட்களில் கோயில் ஊழியர்கள் கொண்டு வருவர். மூலவர் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். போக சீனிவாசப்பெருமாள் என்னும் சிறிய

விக்ரஹத்திற்கே முழுமையான அபிஷேகம் செய்வர். வாசனைத்தைலம், திருமஞ்சனப்பொடி, பசும்பால், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்த பின், அலங்காரம் நடக்கும். அதன்பின், கண்ணாடியில் பெருமாளுக்கு முகம் காட்டி, அவர் முன் குடை பிடித்து, சாமரம் வீசுவர். இதன்பின் தீபாராதனை செய்யப்படும்.

***






      Dinamalar
      Follow us