ADDED : ஜன 08, 2021 05:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகில் தாயன்பு போல கலப்படமற்றது வேறேதுவும் இல்லை.
* மனைவியை தன் வருமானத்திற்குள் வாழ வைப்பதே கணவருக்கு கவுரவம்.
* குழந்தையை போல் கபடம் இல்லாமல் வாழப் பழகுங்கள்.
* கடவுளை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பலன் உண்டு.
* பிதுர் காரியங்களுக்கு சிரத்தையும், தெய்வ செயல்களுக்கு பக்தியும் வேண்டும்.
* எந்த நிலையில் இருந்தாலும் கடவுளின் குணங்களை கேட்பதை லட்சியமாக கொள்ளுங்கள்.
* முதலில் வெளியில் அடக்கம் ஏற்பட்டால் தான் மனதில் அடக்கம் ஏற்படும்.
* வாழ்க்கை என்பது லாப, நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல.
* மற்றவர் துன்பத்தை தீர்க்க நம்மால் ஆனதை செய்ய வேண்டும்.
* எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருப்பது நல்லது.
* மனம் எதை இடைவிடாமல் நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும்.
மனம் திறக்கிறார் காஞ்சி மகாபெரியவர்