ADDED : ஜன 08, 2021 05:19 PM

* நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். எதையும் சாதிக்கும் வலிமை நமக்குண்டு.
* பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் வாழ்வில் முன்னேற முடியாது.
* உடல், மனதை பலவீனப்படுத்தும் எதையும் கையால் கூட தொட வேண்டாம்.
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகளே நமக்குத் தேவை.
* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலாவது துரத்திட முயற்சி செய்யுங்கள்.
* தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுளிடம் நம்பிக்கை ஏற்படாது.
* துருப்பிடித்து தேய்வதை விட உழைத்துத் தேய்வதே மேலானது.
* கோழையாக இருப்பவன் கூட விடாமுயற்சியால் வீரனாக மாற முடியும்.
* லட்சிய நோக்கில் முடிந்த வரை சிறப்பாக செயல்படுங்கள்.
* நல்ல வழியில் பணம் சேர்ப்பதும், அதை சமுதாயத்திற்கு செலவிடுவதும் சிறந்த வழிபாடு.
உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்