sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

திருமணயோகம் வந்தாச்சு

/

திருமணயோகம் வந்தாச்சு

திருமணயோகம் வந்தாச்சு

திருமணயோகம் வந்தாச்சு


ADDED : ஜூன் 30, 2020 10:07 AM

Google News

ADDED : ஜூன் 30, 2020 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் அநேகதங்காவதர் கோயிலில் விநாயகர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் உள்ளது. இத்தலத்தில் தான் விநாயகர் வல்லபையை திருமணம் புரிந்தார். இங்கு தரிசிப்போருக்கு திருமண யோகம் உண்டாகும்.

ஒருமுறை பிரம்மாவின் புத்திரரான மரீஷி மகரிஷி குளத்தில் நீராடச் சென்றார். அங்கிருந்த தாமரை மலரில் ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். 'வல்லபை' எனப் பெயரிட்டு வளர்த்தார். சிவபக்தையான அப்பெண்ணை கேசி என்னும் அசுரன் கடத்திச் சென்றான். அவள் தன்னை காத்தருளும்படி சிவனிடம் முறையிட்டாள் வல்லபை. அப்பெண்ணை மீட்க முதல் கடவுளான விநாயகரை அனுப்பினார் சிவன்.

அசுரவதம் நடத்தும் முன் வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து விநாயகர் வழிபட்டார். அதன்பின் அசுரனை அழித்து வல்லபையை காப்பாற்றினார். விநாயகருக்கும், வல்லபைக்கும் திருமணத்தை சிவனும், பார்வதியும் இத்தலத்தில் நடத்தி வைத்தனர்.

மூலவர் சிவன் பெரிய லிங்க வடிவில் கிழக்கு நோக்கி உள்ளார். காஞ்சி காமாட்சியே இவருக்குரிய அம்மனாக இருப்பதால் அம்மன் சன்னதி இங்கில்லை. விநாயகர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம், 'அநேகதங்காவத ஈஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். விநாயகருக்கு 'அநேகதங்காவதர்' என்று பெயருண்டு. இத்தலத்தை, 'கச்சி அநேகதங்காவதமே!' என்று சுந்தரர் தேவாரப் பதிகத்தில் பாடியுள்ளார்.

விநாயகர் வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு விநாயகர் மட்டுமே காட்சியளிக்கிறார். அவரது உடம்பில் வல்லபை ஐக்கியமானதாகச் சொல்வர். திருமணத்தடை போக்கும் இவருக்கு வளர்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களில் பக்தர்கள் அருகம்புல் மாலை சாத்தி வழிபடுகின்றனர். திருமணம் முடிந்தபின் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். குபேரன் வழிபட்ட தலம் என்பதால் இங்கு வருவோருக்கு நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கும்.

தட்சிணாமூர்த்தி, துர்கைக்கு சன்னதிகள் உள்ளன. குருபலம் பெற தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையில் வில்வமாலை, கொண்டைக்கடலை மாலையும், ராகுதோஷம் அகல துர்கைக்கு வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை, செவ்வரளி மாலையும் சாத்துகின்றனர்.

எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,

விசஷே நாட்கள்: விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி

நேரம்: காலை 6:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 044 - 2722 2084

அருகிலுள்ள தலம்: காஞ்சி காமாட்சியம்மன் கோயில்







      Dinamalar
      Follow us