sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

குளித்தலை கடம்பவனநாதர்

/

குளித்தலை கடம்பவனநாதர்

குளித்தலை கடம்பவனநாதர்

குளித்தலை கடம்பவனநாதர்


ADDED : ஜூன் 15, 2017 12:25 PM

Google News

ADDED : ஜூன் 15, 2017 12:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவன் கோயில்களில் மூலவர் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் குளித்தலையில் உள்ள 'கடம்ப வனநாதர்' வடக்கு நோக்கி வீற்றிருப்பது சிறப்பு.

தல வரலாறு: தூம்ரலோசனன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தினான். தங்களை காப்பாற்றும்படி அம்பிகையிடம் வேண்டினர். அம்பிகை, துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்ற வரத்தால், துர்க்கையுடன் சம பலமுடன் மோதவே சப்த கன்னியராக உருவெடுத்து அசுரனுடன் போர் புரிந்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் வனத்திற்குள் ஓடி கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்தான். சப்த கன்னியரும் ஆசிரமத்திற்குள் சென்றனர். தூம்ரலோசனனே முனிவர் போல உருமாறி இருப்பதாக கருதிய சப்த கன்னியர் அவரைக் கொன்றனர். இதன்

பின் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அறியாமல் செய்த இப்பாவம் தீர சிவனை வேண்டி தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்ததுடன் அசுரனையும் அழித்தார்.

சப்த கன்னியர்: கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் சாப விமோசனம் பெற்றவர்களாக இருக்கின்றனர். சுவாமிக்கு நேர் பின்புறமிருக்கும் சப்த கன்னியரில் ஒருத்தியான சாமுண்டியை துர்க்கையாக கருதுகின்றனர். பெண்கள் ராகு நேரத்தில் சிவன் சன்னதியிலேயே எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர்.

தட்சிண காசி: காசிக்கு நிகரான தலம் என்பதால் தட்சிண காசி எனப்படுகிறது. இங்கு சிவன் சுயம்புவாக வடக்கு நோக்கி இருக்கிறார். கோமுகம் வலது புறமாக திரும்பி உள்ளது. அம்பாள் முற்றிலா முலையம்மை கிழக்கு நோக்கி இருக்கிறாள்.

இந்தக் கோயிலின் அருகே ரத்தினகிரி, ஈங்கோய் மலை ஆகிய ஊர்களில் சிவன் கோவில்கள் உள்ளன. 'காலையில் குளித்தலை கடம்பர், மதியம் ரத்தினகிரி சொக்கர் கோயில் (8 கி.மீ.,), மாலையில் ஈங்கோய்மலை மரகதநாதர் கோயில் (5 கி.மீ.,) என்ற வரிசையில் வழி பட்டால் குறைவிலாத பலன் கிடைக்கும்.

இரண்டு நடராஜர்: சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன், இங்கு சிவனை வழிபட்டார். இவர் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். ஒரே சன்னதியில் இரு நடராஜர் இங்குள்ளனர். ஒருவரது பாதத்தின் கீழ் அசுரன் இல்லை. தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு நோக்கியும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு நோக்கியும் உள்ளனர்.

எப்படி செல்வது: கரூர்- திருச்சி சாலையில் 40 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 04323 - 522 5228






      Dinamalar
      Follow us