sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

குடுமி கோயில்

/

குடுமி கோயில்

குடுமி கோயில்

குடுமி கோயில்


ADDED : மார் 25, 2013 03:40 PM

Google News

ADDED : மார் 25, 2013 03:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 26 பங்குனி உத்திர திருக்கல்யாணம்

பங்குனி உத்திரத்தன்று சிவபார்வதி திருமணம் நடந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் செங்கல்பட்டு அருகிலுள்ள பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடக்கும்.

தல வரலாறு:





சோழமன்னன் ஒருவன் குழந்தை வரத்திற்காக, கட்டிய 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. ஒருசமயம் மன்னன் இங்கு வந்தான். எந்த முன்னேற்பாடும் செய்யாத அர்ச்சகர், சுவாமிக்கு அணிவிக்க தன் மனைவி சூடியிருந்த பூவை எடுத்து வந்தார். அதை சிவனுக்கு சூட்டி பிரசாதமாக மன்னனிடம் கொடுத்தார். அதில் முடி இருந்ததைக் கண்ட மன்னன் அர்ச்சகரிடம், ''முடி எப்படி வந்தது?'' என அதட்டினான். பயத்தில், அர்ச்சகர் 'அதுவா! அது சிவனின் குடுமியில் இருந்த முடி' என சொல்லிவிட்டார். மன்னன் அதை நம்பவில்லை. சிவலிங்கத்திலுள்ள குடுமியைக் காட்டும்படி கேட்க, அர்ச்சகர் மறுநாள் காட்டுவதாகச் சொன்னார். குடுமியைக் காட்டாவிட்டால், கடும் தண்டனையை சந்திக்க நேரிடும் என எச்சரித்தான் மன்னன்.

கலங்கிய அர்ச்சகர் தன்னைக் காக்கும்படி சிவனை வேண்டினார். மறுநாள் மன்னன் வந்தபோது, சிவலிங்கத்தில் குடுமி இருந்தது. அர்ச்சகரைக் காக்க குடுமியுடன் காட்சி தந்ததால் சிவன், 'முன்குடுமீஸ்வரர்' என பெயர் பெற்றார்.

ஆசையால் விளைந்த துன்பம்:





இங்கு வசித்த அந்தணர், ஒரு பணியாளருக்கு தனது நிலத்தின் ஒரு பகுதியைக் கொடுத்தார்.

நிலத்தைக் கொடுத்த பிறகு தான், அதில் குறிப்பிட்ட காலத்தில் விதைக்கப்படும் நெல், தங்க மணிகளாக மாறும் என்ற உண்மையை அறிந்தார். தனது மற்ற நிலங்களை எடுத்துக் கொள்ளும்படியும், ஏற்கனவே கொடுத்த நிலத்தை திரும்பத்தரும்படியும் பணியாளரிடம் கேட்டார். பணியாளரும் ஒப்புக்கொண்டார். அந்த வயலில் விளைந்த பொன் கதிர்களை அந்தணர் எடுத்துக் கொண்டார்.

இதையறிந்த மக்கள், அவரிடம் பணியாளருக்கும் பங்கு கொடுக்கும்படி சொல்ல, மறுத்துவிட்டார். விஷயம் மன்னனுக்குச் செல்லவே அவன், பொன் நெற்கதிர்களை அரசுக்கணக்கில் சேர்க்க உத்தரவிட்டான். அந்தணருக்கு உள்ளதும் போய்விட்டது. பொன் நெல் விளைந்ததால் இவ்வூர், 'பொன்விளைந்த களத்தூர்' என பெயர் பெற்றது.

நாயனார் சிறப்பு:





மீனாட்சி அம்மன் தனிச்சந்நிதியில் இருக்கிறாள். கூற்றுவ நாயனார் திருப்பணி செய்துள்ளார். முன் மண்டபத்தில் இவரது சிலை இருக்கிறது. இந்தக் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, சண்டிகேஸ்வரருக்குப் பதிலாக கூற்றுவ நாயனார் புறப்பாடாகிறார்.

இருப்பிடம்:





செங்கல்பட்டு- திருக்கழுக்குன்றம் ரோட்டில் 8 கி.மீ.,

திறக்கும் நேரம்:





காலை 6- 7 மணி, மாலை 5- 6 மணி.

போன்: 94431 68951.






      Dinamalar
      Follow us