ADDED : ஜன 17, 2018 03:59 PM

* உள்ளத்தின் சிரிப்பே உண்மையான சிரிப்பு. அதுவே இன்பம் தரும். வெறும் உதட்டுச் சிரிப்பை உண்மை என்று எண்ணாதே.
* எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனே உயர்ந்த மனிதன். கோபம் இல்லாதவனே துக்கம் இல்லாதவன்.
* கற்றதை மறந்து தீயவழியில் செல்பவன் கண்களை இழக்கிறான். நல்லதை கேட்கமனம் இல்லாதவன் காதுகளை இழக்கிறான்.
* உலகின் போற்றுதலையோ, துாற்றுதலையோ பொருட்படுத்தாமல் உன் கடமையில் ஈடுபடு. உயர்வான பரம்பொருள் மீது மனதை செலுத்து.
* நெருப்பு இல்லாமல் சமைக்க முடியாதது போல, ஞானம் இல்லாமல் மோட்சத்தை மனிதன் அடைய முடியாது.
* பயன் இல்லாத ஒரு வார்த்தை கூட பேசுவது கூடாது. தெய்வ வசத்தால் கிடைத்த பொருளை கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்.
* மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு நீங்காமல் தொடர்கிறது.
விளக்குகிறார் ஆதிசங்கரர்