ADDED : ஜன 17, 2018 03:59 PM

* ஊருக்கு நல்லது செய்யும் விதத்தில் உழைப்பவன் யோகசாலி. அவன் கடவுளுக்கே பணி செய்த பாக்கியம் பெறுகிறான்.
* கடவுளுக்கு செய்யும் தொண்டு, ஆசிரியர்களுக்கு செய்யும் சேவை, பக்தர்களுக்கு செய்யும் பணி ஆகிய மூன்றும் புண்ணியம் மிக்கதாகும்.
* முன்னோர் நமக்காக எழுதி வைத்த நுால்களிலுள்ள கருத்துகளை முழுமையாக ஏற்க வேண்டும். சாதாரண நுால்கள் சொல்வதை ஏற்க வேண்டியதில்லை.
* கோபுரங்களை, கோயில்களின் விமானங்களை கண்டவுடனேயே எழுந்து நின்று வணங்க வேண்டும்.
* வயிறு வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துபவருடன் நட்பு பாராட்டாதே. பிறர் மீது குற்றம் சொல்பவருடன் பேசாதே.
* பகவானுக்கு நிவேதனம் செய்யாத உணவை சாப்பிடாதே. நீ விரும்பியதை எல்லாம், பெருமாளுக்கு நிவேதனம் செய்யாதே. புனித நுால்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களை நிவேதனம் செய்.
* கடவுளுக்கு படைத்த உணவு, நீர், சந்தனம், மலர், தாம்பூலம் ஆகியவற்றை பிரசாதமாக கருத வேண்டும்.
சொல்கிறார் ராமானுஜர்