/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
உண்மையைச் சொல்லி நல்லதைச் செய்வோம்
/
உண்மையைச் சொல்லி நல்லதைச் செய்வோம்
ADDED : பிப் 07, 2020 08:52 AM

* எப்போதும் உண்மை பேசுங்கள். நற்செயலில் மட்டும் ஈடுபடுங்கள்.
* கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். உலகம் உங்களை மதிக்கும்.
* அன்பு, அருள், இரக்கம், கருணை, அறிவு கொண்டவன் தெய்வ இயல்பை பெறுகிறான்.
* தினமும் கடவுளை வணங்காவிட்டால் அருள் உணர்வு இல்லாமல் போகும்.
* ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வு பாராட்டாதீர். அனைவரும் சமம்.
* பசித்தவருக்கு உணவு அளிப்பதோடு தேவையான உதவியும் செய்ய வேண்டும்.
* முற்பிறவியின் புண்ணியத்தால் மனிதப்பிறவி கிடைத்துள்ளது. அதைப் பொறுப்புடன் காப்பது நம் கடமை.
* கற்கண்டை ருசித்தவன் கருங்கல்லை விரும்பமாட்டான். கடவுளை அறிந்தவன் மற்றதை விரும்ப மாட்டான்.
* கடவுளை அறிந்தால் கவலை, துன்பம் நேராது.
* கையில் ஜபமாலையும், வாயில் மந்திரமும் இருந்தால் மட்டும் போதாது. கடவுளின் திருவடியில் மனம் ஒன்ற வேண்டும்.
* பொய்மையை நம்பாதீர்! வஞ்சகர்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதீர்!
* நல்லோர் மனம் நடுங்கும் விதத்தில் செயல்படக் கூடாது. தானம் கொடுப்பவரை தடுக்கக் கூடாது.
* நம்பியவனுக்கு வஞ்சகம் செய்வது நல்லதல்ல. மற்றவர் வயிறு எரிய தீமை செய்வது கூடாது.
* இல்லை என கேட்போருக்கு உதவ வேண்டும். பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது.
சொல்கிறார் வள்ளலார்