ADDED : பிப் 20, 2018 10:47 AM

இந்த போற்றியை சொல்லி சரபேஸ்வரரை வணங்கினால், என்ன நடந்தாலும் தைரியத்துடன் பிரச்னைகளை அணுகலாம்.
ஓம் அம்ருத அரசே போற்றி
ஓம் அட்சர காரணனே போற்றி
ஓம் அறம் பொருள் இன்பம் அளிப்பாய் போற்றி
ஓம் அம்பலத்திலே ஆடும் அரசே போற்றி
ஓம் அதர்வண காளி அடைந்தவா போற்றி
ஓம் அருள் கூட்டும் சுயஞ்ஜோதியே போற்றி
ஓம் அடியார்க்கு அருளும் அடியவனே போற்றி
ஓம் அழைத்தாலே வருவோனே போற்றி
ஓம் ஆனந்தா போற்றி
ஓம் ஆதி சிவனே போற்றி
ஓம் ஆட்டிப் படைப்பாய் போற்றி
ஓம் ஆங்கார தேவா போற்றி
ஓம் ஆக்கல், அழித்தல் தலைவா போற்றி
ஓம் ஆயிரம் நாமம் உடையாய் போற்றி
ஓம் உள்ளுவார் உள்ளத்தில் உறைவாய் போற்றி
ஓம் எட்டு திசையும் காப்பாய் போற்றி
ஓம் எதிரிகள் கொடுமை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்ணியதை எமக்கருள்வாய் போற்றி
ஓம் எல்லாமாய் இருப்பவனே போற்றி
ஓம் ஏவல் தீர்ப்பாய் போற்றி
ஓம் கருத்தில் நிறைந்தவனே போற்றி
ஓம் கனலாய் சுடர் விடுபவனே போற்றி
ஓம் கர்ப்பப்பை காப்பவனே போற்றி
ஓம் கருணை தெய்வமே போற்றி
ஓம் கால பைரவா போற்றி
ஓம் காற்றென வருவாய் போற்றி
ஓம் காத்து கருப்பு அழிப்பாய் போற்றி
ஓம் காலனை அடக்கியவனே போற்றி
ஓம் காலகாலமாய் இருப்பவனே போற்றி
ஓம் குருவுக்கு உரு தந்த ஜோதியே போற்றி
ஓம் கைலாசவாசா போற்றி
ஓம் சத்திய துணையே போற்றி
ஓம் சத்திய சாட்சியே போற்றி
ஓம் சத்திய உருவே போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் சர்வ வியாபியே போற்றி
ஓம் சாந்தி அருள்பவனே போற்றி
ஓம் சிவச்சுடரே போற்றி
ஓம் சிவத்தின் வடிவமே போற்றி
ஓம் சித்தர் போற்றும் சித்தனே போற்றி
ஓம் சித்தார்த்த பக்தி சித்தனே போற்றி
ஓம் சிந்தாமணியின் ஜீவ சிவனே போற்றி
ஓம் சிந்தனைக்கினிய செல்வனே போற்றி
ஓம் சுடர்விடும் சூரியா போற்றி
ஓம் சூலினித் தாயின் சுகத்தோனே போற்றி
ஓம் சூலினியின் சூட்சும தேவா போற்றி
ஓம் சூலினி தேவா போற்றி
ஓம் திகம்பரா போற்றி
ஓம் திண்ணவா போற்றி
ஓம் திருபுவனேசா போற்றி
ஓம் திருவருள் தருவாய் போற்றி
ஓம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி
ஓம் திடமாய் செய்ய வைப்பாய் போற்றி
ஓம் திருவுக்கும் திருவான சிவனே போற்றி
ஓம் தீபத்தில் எழுபவனே போற்றி
ஓம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி
ஓம் தவெிட்டாத சின்மயச் சுடரே போற்றி
ஓம் தேவர் படைத்தலைவா போற்றி
ஓம் நமசிவாய திருவே போற்றி
ஓம் நம்பி வருவோர்க்கு அருள்வாய் போற்றி
ஓம் நஞ்சை புஞ்சை காப்பாய் போற்றி
ஓம் நரசிம்மரை அடக்கியவனே போற்றி
ஓம் நகமே ஆயுதமாய்க் கொண்டாய் போற்றி
ஓம் நலம் தரும் தெய்வமே போற்றி
ஓம் நடுக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் நம்பினோர்க்கு நலம் அருள்வாய் போற்றி
ஓம் நான்மறை ஆனாய் போற்றி
ஓம் நாகலிங்க சக்தியே போற்றி
ஓம் நிரந்தரமானவனே போற்றி
ஓம் நியாயம் வழங்குபவனே போற்றி
ஓம் நோய்கள் தீர்க்கும் நெடியாய் போற்றி
ஓம் பரமாத்மனே போற்றி
ஓம் பரப்பிரம்மனே போற்றி
ஓம் பரப்பிரம்ம ஜோதியே போற்றி
ஓம் பிறவி அறுத்தவனே போற்றி
ஓம் பில்லி சூன்யம் அழிப்பாய் போற்றி
ஓம் பிரத்தியங்கிரா பிராணநாதா போற்றி
ஓம் பிரத்யங்கிரா தேவியின் பரப்ரும்மமே போற்றி
ஓம் புவனம் கோடி படைத்தாய் போற்றி
ஓம் பூரண சரபேசா போற்றி
ஓம் மகாதேவா போற்றி
ஓம் மந்திரத் துதி தேவா போற்றி
ஓம் மந்திரம் ஆள்பவனே போற்றி
ஓம் மழு துாக்கிச் சிறந்தோனே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பவனே போற்றி
ஓம் மாமலர் பறவை அரசே போற்றி
ஓம் மான் துாக்கி நின்றோனே போற்றி
ஓம் முக்திக்கு வித்தாகும் மூலனே போற்றி
ஓம் முக்தர்கள் ஜீவ ஒளியே போற்றி
ஓம் முழுவதுமாய் எம்மைக் காப்பாய் போற்றி
ஓம் மூலவர்க்கெல்லாம் மூலவா போற்றி
ஓம் மூவர்க்கும் முந்திய முதல்வா போற்றி
ஓம் யாவையும் யாவரும் ஆனாய் போற்றி
ஓம் ருத்ர அக்னியே போற்றி
ஓம் ருத்திர மூர்த்தியே போற்றி
ஓம் ருத்ராட்சம் அணிந்தவனே போற்றி
ஓம் வழித்துணையாய் வருவாய் போற்றி
ஓம் வல்லார்கள் வணங்கும் தேவா போற்றி
ஓம் வாழி வாழி சாலுவேசா வாழி போற்றி
ஓம் வானவர் போற்றும் வல்லவனே போற்றி
ஓம் விண்ணவா போற்றி
ஓம் விளங்கு உயர் தீரா போற்றி
ஓம் விடிவு காலம் தருவாய் போற்றி
ஓம் வித்தகனே சத்தியமே போற்றி
ஓம் வீரபத்திரனே போற்றி
ஓம் வீரத்தின் விளைநிலமே போற்றி
ஓம் வித்தகனே தத்துவமே போற்றி
ஓம் வேதம் தொழும் தெய்வமே போற்றி! போற்றி!!