sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தசாவதார தகடு தரிசனம்!

/

தசாவதார தகடு தரிசனம்!

தசாவதார தகடு தரிசனம்!

தசாவதார தகடு தரிசனம்!


ADDED : பிப் 20, 2018 10:48 AM

Google News

ADDED : பிப் 20, 2018 10:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தசாவதாரத்தையும் சிலை வடிவில் தரிசிக்க திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகில் தசாவதார கோயில் இருக்கிறது. மதுரை அழகர்கோயிலில் தசாவதார சன்னதி இருக்கிறது. ஆனால், செப்புத் தகடுகளில் பொறித்து, மாலையாக, பெருமாளின் இடுப்பில் கட்டியிருப்பதை காண வேண்டுமானால், நாகப்பட்டினம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

தல வரலாறு: உத்தானபாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் சிறு வயதில் சிற்றன்னையால் அவமானப்படுத்தப்பட்டான். அந்த அவமானத்தை துடைக்க, பூலோகம் மட்டுமின்றி தேவலோகமும் தனக்கு அடிமையாக வேண்டும் என வேண்டி, பெருமாளை குறித்து தவம் செய்தான்.

தேவலோகம் தங்களிடமிருந்து பறிபோவதை விரும்பாத தேவர்கள், அவனது தவத்தை கலைக்க இடைஞ்சல் செய்தனர்.

இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன், கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக பெருமாள் தரிசனம் தந்தார்.

பெருமாளின் அழகில் மயங்கிய துருவன், கேட்க வந்த வரத்தை மறந்தான். “பெருமாளே! இந்த உலகம் எனக்கு அடிமையாகி நான் என்ன செய்யப் போகிறேன்? உனக்கு நான் அடிமையாகிறேன். அதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. உன் பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும்,” என கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான (அழகான) திருக்கோலத்துடன் அவன் தவமிருந்த தலத்தில் தங்கினார். 'சவுந்தரராஜ பெருமாள்' என பெயர் பெற்றார்.

ஊர் பெயர்க்காரணம்: நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன், ஒரு இடத்தில் தீர்த்தம் உண்டாக்கி, அதற்கு 'சாரபுஷ்கரணி' என பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாளை குறித்து தவமிருந்தான். அவருக்கு படுக்கையாக வேண்டும் என்பது அவனது விருப்பம். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக அருள் புரிந்தார். நாகம் பெருமாளை ஆராதித்ததால் அதன் பெயரால், இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.

தல சிறப்பு: பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. நான்கு யுகம் கண்ட இந்தப்பெருமாள் நின்ற, படுத்த, அமர்ந்த கோலங்களில் அருள்பாலிக்கிறார்.

தசாவதாரங்களை விளக்கக் கூடிய செம்பு தகட்டாலான மாலை, பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்த்தால் புண்ணியம் கிடைக்கும். காலசர்ப்பதோஷம், திருமணத்தடை நீங்கும். இங்குள்ள சாரபுஷ்கரணியில் நீராடி பெருமாளை வழிபட்டால், பிறப்பற்ற நிலையடைவர்.

அஷ்டபுஜ நரசிம்மர்: நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன், அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன. இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள்.

எப்படி செல்வது: நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.,

விசேஷ நாட்கள்: பங்குனி பிரம்மோற்ஸவம் 10 நாள், ஆனி உத்திரம் 10 நாள், ஆடிப்பூரத்தில் ஆண்டாளுக்கு 10 நாள் விழா

நேரம்: காலை 7:30 - 12:00 மணி; மாலை 5:30 - 9:00 மணி

தொலைபேசி: 04365 - 221 374

அருகிலுள்ள தலம்: நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயில்







      Dinamalar
      Follow us