sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வரதா.. வரதா.. கல்யாண வரம் தா...

/

வரதா.. வரதா.. கல்யாண வரம் தா...

வரதா.. வரதா.. கல்யாண வரம் தா...

வரதா.. வரதா.. கல்யாண வரம் தா...


ADDED : பிப் 20, 2018 10:53 AM

Google News

ADDED : பிப் 20, 2018 10:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தடைபட்ட திருமணத்தை இனிதே நடத்த அருள்புரியும் கல்யாண வரதராஜ பெருமாள், சென்னை திருவொற்றியூரில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு: ஆங்கிலேயர் ஆட்சியின்போது, இப்பகுதியை நிர்வகித்து வந்த கோலட்துரையிடம், விஜயராகவாச்சாரியார் என்னும் பெருமாள் பக்தர் பணியாற்றினார். தினமும் காஞ்சிபுரம் சென்று பவளவண்ணப் பெருமாளை தரிசிப்பது வழக்கம். இவரது பக்தியைக் கண்ட கோலட்துரை, அவருக்கு சென்னையில் கோயில் கட்டித் தந்தார்.

பெருமாளுக்கு 'வரதராஜர்' என பெயர் சூட்டப்பட்டது. வரதராஜரை வணங்கினாலும், காஞ்சிபுர பவளவண்ணரின் நினைவு விஜயராகவரின் மனதை விட்டு நீங்கவில்லை.

மீண்டும் காஞ்சிபுரம் செல்லத் துவங்கினார். இவரது பக்திக்கு மரியாதை செய்ய எண்ணிய கோலட்துரை, பவளவண்ணர் கோயிலில் இருந்த உற்சவரைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார். அதன்பிறகு, விஜயராகவர் காஞ்சி செல்லவில்லை.

அவருக்கு காட்சி தந்த சுவாமி, “திருமேனியில் (சிலை) எந்த வித்தியாசமும் இல்லை. எங்கு எந்தப் பெயரில் இருந்தாலும் நான் ஒருவனே,” என்றார்.

திருமண வழிபாடு: உற்சவர் பவளவண்ணர் கையில் தண்டத்துடன் காட்சி தருகிறார். இவரது திருவடிக்கு மட்டுமே திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. பெருந்தேவி தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள்.

பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடக்கிறது. சுவாமியையும், தாயாரையும் தரிசிக்க சிறந்த மணவாழ்வு அமையும். திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது உத்திரம் நட்சத்திர நாளில் மட்டைத்தேங்காய் வைத்து பூஜித்து, அதை வீட்டுக்கு கொண்டு வந்து தினமும் வணங்குவர். தடைபட்ட திருமணத்தை இனிதே நடத்துபவர் என்பதால் சுவாமிக்கு, 'கல்யாண வரதராஜ பெருமாள்' என பெயர் வந்தது.

கர்ப்ப உற்சவம்: ராமநவமியை ஒட்டி இங்கு 9 நாள் விழா நடக்கிறது. பெரும்பாலான கோயில்களில் விழா நவமியில் தொடங்கி 9 நாள் நடக்கும். ராமர் பிறந்த பின் கொண்டாடப்படும் விழா என்பதால் இதை, 'ஜனன உற்சவம்' என்பர். ஆனால் இங்கு நவமியன்று முடியும்படியாக விழா கொண்டாடுகின்றனர். ராமர் பிறக்கும் முன் எடுக்கும் விழா என்பதால் இதற்கு, 'கர்ப்ப உற்சவம்' என்று பெயர். நவமியன்று ராமர் பட்டாபிஷேகம் நடக்கும். முற்காலத்தில் இங்கு 'கர்ப்ப உற்சவம்' 'ஜனன உற்சவம்' என 18 நாட்கள் விழா நடந்ததாக சொல்கின்றனர். தற்போது கர்ப்ப உற்சவம் மட்டும் நடக்கிறது.

சிறப்பம்சம்: தினமும் காலையில் சுவாமி சன்னதியில் கோபூஜை நடக்கிறது.

பிரகாரத்தில் ராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. தாமரை மீதுள்ள பீடத்தில் நவக்கிரகங்கள் காட்சி தருகின்றனர். கோயில் முகப்பில் கிருஷ்ணர் ஸ்தம்பம் உள்ளது. இதன் உச்சியில் தாமரையில் தவழும், குழந்தை கிருஷ்ணரின் சுதை சிற்பம் உள்ளது. இங்கிருந்து சற்று துாரத்தில் திருவொற்றியூர் தியாகராஜர் கோயில், வடக்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி கோயில், பட்டினத்தார் கோயில்கள் உள்ளன.

எப்படி செல்வது: சென்னை எழும்பூரில் இருந்து 12 கி.மீ., கோயம்பேட்டில் இருந்து 22 கி.மீ.,

விசேஷ நாட்கள்: சித்திரையில் ராமானுஜர் விழா 10 நாள், வைகாசியில் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, மாசி மகம், பங்குனி உத்திரம்

நேரம் : காலை 7:00 - 11:30 மணி ; மாலை 5:00 - 8:30 மணி

அலைபேசி: 99401 73559

அருகிலுள்ள தலம்: கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள் கோயில்






      Dinamalar
      Follow us