sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

எந்த வேலையும்... நல்ல வேலை தான்!

/

எந்த வேலையும்... நல்ல வேலை தான்!

எந்த வேலையும்... நல்ல வேலை தான்!

எந்த வேலையும்... நல்ல வேலை தான்!


ADDED : பிப் 20, 2018 10:58 AM

Google News

ADDED : பிப் 20, 2018 10:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்.21 ஸ்ரீ அன்னை பிறந்த தினம்

* கீழான வேலை என எதுவுமில்லை. எப்படி செய்வது என தெரிந்து கொண்டால் எல்லாம் நல்ல வேலை தான்!

* நீ எப்படி இருந்தாய் என்பதைப் பற்றி கவலைப்படுவதால் ஏதும் ஆகப்போவதில்லை. எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினை.

* கடவுளின் அழைப்பிற்காக காத்திருங்கள். அப்போது தான் அவரது அருளைப் பெற முடியும்.

* பயந்தவன் கடவுளிடம் கோபத்தை காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் அவரிடம் புன்னகையையும், அன்பையும் காண்கிறான்.

* நீங்கள் கேட்டதையெல்லாம் கடவுள் தரமாட்டார். உங்கள் தகுதிப்படியே தான் அவர் அருள்வார். கடவுளின் அருளுக்கு உங்களை பாத்திரமாக்கி கொள்ளுங்கள்.

* மனம் என்பது 'பாலீஷ்' செய்யப்பட்ட கண்ணாடி. அதை துாய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை.

* ஒரு நோயாளிக்கு மருந்தை விட முக்கியமானது தன்னம்பிக்கை.

* உன் திறமை எல்லாம் உன்னுடையதே என்று நம்பினால், கடவுளின் ஆதரவு இல்லாமல் போனாலும் அதை இழந்ததாக உணர மாட்டாய்.

* வேலை செய்வது பிரார்த்தனையாக இருக்கட்டும். ஏன் என்றால் வேலை ஒன்றே, கடவுளுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கை.

* வாழ்வில் எந்த நிலையிலும் நேர்மை தவறாதீர்கள். நேர்மையான மனம் உடையவர்களுக்கு, மகிழ்ச்சி என்னும் பரிசை கடவுள் தருவார்.

* பிறரது விஷயத்தில் புதிய மாறுதல் உண்டாக்க விரும்பினால், அந்த மாற்றம் உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கட்டும். எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருங்கள்.

* ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான ஒரு வழிமுறை. அதை உயிராக மதிப்பது நம் கடமை.

* உண்மை, நேர்மை ஆகிய இரு பண்புகளும் மனத்துாய்மைக்கு அவசியம். மனத் துாய்மையின்றி கடவுளை வழிபட்டு பயனில்லை.

* அமைதியுடன் இருக்க பழகி விட்டால், பெரும்பாலான பிரச்னைகளை வாழ்வில் தவிர்த்து விடலாம். எப்போதும் அமைதி காத்து மன வலிமையுடன் இருக்க பழகுங்கள்.

* நாம் பெற்ற அறிவு, கடவுளிடம் இருந்தே வந்தது. கடவுளின் படைப்புகளில் இருந்து மனித குலம் எல்லா அறிவையும் பெற்று கொண்டது.

சொல்கிறார் புதுச்சேரி அன்னை






      Dinamalar
      Follow us