sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தென்னாடுடைய சிவன் திருவிழா தீவினைகள் தீர நடக்கும் விழா

/

தென்னாடுடைய சிவன் திருவிழா தீவினைகள் தீர நடக்கும் விழா

தென்னாடுடைய சிவன் திருவிழா தீவினைகள் தீர நடக்கும் விழா

தென்னாடுடைய சிவன் திருவிழா தீவினைகள் தீர நடக்கும் விழா


ADDED : பிப் 27, 2018 09:34 AM

Google News

ADDED : பிப் 27, 2018 09:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆள்வது எப்படி?

மாசிமகம் நட்சத்திரம் அதிகாலை 3:30- 4.30மணிக்குள் இருக்குமானால் அது மிகவும் சிறப்பான அம்சம். இந்த நேரத்தில் பெண்கள் கருத்தரித்தால், பிறக்கும் குழந்தை யோகமுடையதாகவும், நல்ல குணவானாகவும் இருக்கும். இதை மனதில் கொண்டு தான் 'மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்' என்பர். 'மக' என்ற சொல்லுக்கு, 'இளமை', 'குழந்தை', 'மகம், 'இன்பம்' என்ற பொருள்கள் உண்டு. பொதுவாகவே, அதிகாலைப் பொழுதில் முதல் கர்ப்பம் தரிக்குமானால், அது நல்ல விஷயம் தான். அதிலும் மாசி மகம் நாளாக அமையுமானால் பாக்கியத்திலும் பாக்கியம் என்பர்.

ஒருவர் குளித்தாலே போதும்

மகாமக குளத்தில், குடும்பத்திலுள்ள அனைவரும் நீராடவில்லை என்றாலும் ஒருவர் மட்டும் நீராடினாலும் போதும்! முந்தைய, இப்போதைய தலைமுறையினர் செய்த பாவம் நீங்கி விடும். இனி வரப்போகும் தலைமுறையினர் பாவம் செய்யாத நிலை கிடைக்கும். தன் குடும்பம், தாய்வழி குடும்பம், தந்தை வழி குடும்பம், சம்பந்தி (பெண்ணை எடுத்தவர்) வழி குடும்பம், சிற்றன்னை குடும்பம், உடன்பிறந்தோர் குடும்பம், தந்தையுடன் பிறந்த சகோதரிகள் குடும்பம், தாய்மாமன் மற்றும் பெண் கொடுத்த மாமனார் குடும்பம் ஆகிய ஏழு வகை குடும்பங்களும் பாவம் நீங்கி புண்ணியம் பெறுவர். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. குளித்த பிறகு அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களின் மனதில் பாவ எண்ணம் உருவாக கூடாது.

சுற்றினாலே போதும்!

மாசிமகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் நீராட வேண்டுமென்பதில்லை. இக்குளத்தை சுற்றி வந்தாலே, நற்பலன் கிடைக்கும். ஒருமுறை சுற்றினால், பாற்கடலைக் கடையும் போது மத்தாக இருந்த மேருமலையை நுாறு தடவை சுற்றிய பலனும், இருமுறை சுற்றினால் சிவலோகத்தை வலம் வந்த பலனும், மூன்றுமுறை சுற்றினால் பிறப்பற்ற நிலையும் ஏற்படும். மகாமக குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் தீர்ந்து விடும்.

மகாமக குளம் தீர்த்த நீராட்ட பலன்

மகாமக குளத்திற்குள் 19 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் நீராடினால் ஏற்படும் பலன்.

01. வாயு தீர்த்தம் - நோய் நீங்குதல்

02. கங்கை தீர்த்தம் - அமைதியான மரணம்

03. பிரம்ம தீர்த்தம் - முன்னோர்களின் பாவம் தொலைதல்

04. யமுனை தீர்த்தம் - தங்க ஆபரணம் சேருதல்

05. குபேர தீர்த்தம் - செல்வ அபிவிருத்தி

06. கோதாவரி தீர்த்தம் - விரும்பியது நடக்கும்

07. ஈசான்ய தீர்த்தம் - அவதிப்படுவோர் சிவனடி சேர்தல்

08. நர்மதை தீர்த்தம் - தேக பலம் உண்டாகுதல்

09. இந்திர தீர்த்தம் - சொர்க்க வாழ்வு

10. சரஸ்வதி தீர்த்தம் - கல்வி விருத்தி

11. அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி (கொலை)பாவம் நீங்கும்

12. காவிரி தீர்த்தம் - குழந்தை பாக்கியம்

13. யமன் தீர்த்தம் - எமபயம் நீங்குதல்

14. குமரி தீர்த்தம் - அஸ்வமேத யாக பலன்

15. நிருதி தீர்த்தம் - திருஷ்டி, பயம் விலகுதல்

16. பயோடினி தீர்த்தம் - குடும்ப ஒற்றுமை

17. தேவ தீர்த்தம் - ஆயுள் அதிகரிக்கும்

18. வருண தீர்த்தம் - மழை வளம் பெருகும்

19. சரயு தீர்த்தம் - நிம்மதி நிலைக்கும்

16 லிங்கங்கள்

மகாமக குளக்கரையில் 16 லிங்கங்களுக்கு சன்னதி உள்ளன. அந்த லிங்கங்களின் பெயர்கள் வருமாறு.

1. பிரம்ம தீர்த்தேஸ்வரர்

2. முகுந்தேஸ்வரர்

3. தனேஸ்வரர்

4. விருஷபேஸ்வரர்

5. பரணேஸ்வரர்

6. கோணேஸ்வரர்

7. பக்திஹேஸ்வரர்

8. பைரவேஸ்வரர்

9. அகத்தீஸ்வரர்

10. வியாசேஸ்வரர்

11. உமைபாகேஸ்வரர்

12. நைருத்தீஸ்வரர்

13. பிரம்மேஸ்வரர்

14. கங்காதரேஸ்வரர்

15. முத்த தீர்த்தேஸ்வரர்

16. ஷேத்திர பாலேஸ்வரர்






      Dinamalar
      Follow us