sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கிளம்புவோமா கும்பகோணத்துக்கு!

/

கிளம்புவோமா கும்பகோணத்துக்கு!

கிளம்புவோமா கும்பகோணத்துக்கு!

கிளம்புவோமா கும்பகோணத்துக்கு!


ADDED : பிப் 16, 2014 03:11 PM

Google News

ADDED : பிப் 16, 2014 03:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசகர்களே! பிப்.15ல் மாசிமகத் திருவிழா கும்பகோணத்தில் நடக்கிறது. இதையொட்டி, இங்குள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று வாருங்கள். மகாமகத்தன்று, இந்தக் கோயில்களில் உள்ள சிவன் மகாமக குளத்திற்கும், பெருமாள் காவிரிக்கும் எழுந்தருள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் - சிறப்பு - திறக்கும் நேரம் - இருப்பிடம்/போன்

1. கும்பேஸ்வரர் - உலகம் அழிந்த காலத்தில், பிரம்மா தன் படைப்புக் கலன்களைக் காப்பாற்ற, அமிர்தம் நிரம்பிய ஒரு கும்பத்தில் வைத்து மிதக்க விட்டார். அந்தக் கும்பம் தங்கிய இடம் இது. அம்மன் மங்களாம்பிகை. - காலை 6.00 - 12.30 மாலை 4.00 - 9.00 - பஸ் ஸ்டாண்ட் அருகில். 0435- 242 0276.

2. பாணபுரீஸ்வரர் - உலகம் அழிந்த காலத்தில், தண்ணீரில் மிதந்த கும்பத்தை சிவன் பாணத்தால் உடைத்த தலம் அம்மன் சோமகலாம்பாள். - காலை 7.00 - 11.30 மாலை 5.00 - 8.00 - கும்பகோணம் நகர எல்லையிலுள்ள பாணாத்துறை.

3. கோடீஸ்வரர் - கோடி லிங்கங்களை தரிசித்த பலன். பாவம் நீங்கும். அம்மன் பந்தாடு நாயகி. - காலை 7.00 - 12.00 மாலை 5.00 - 8.00 - கும்பகோணம்-சுவாமிமலை ரோட்டில் 4 கி.மீ.,

4. ஆதிகம்பட்ட விஸ்வநாதர் - நகை வியாபாரிகள், ஆசிரியர், மாணவர்கள் பிரார்த்தனை தலம். அம்பாள் ஆனந்தநிதி. - காலை 7.00 - 12.00 மாலை 5.00 - 8.00 - கம்பட்ட விஸ்வநாதர் கீழவீதி.

5. காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் - மகாமக குளத்திற்கு இந்தக் கோயிலிலிருந்து மட்டுமே, சிவனுக்கு பதிலாக, காமாட்சி எழுந்தருள்வாள். - காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 - கும்பகோணம் நாகேஸ்வரம் கீழ வீதி.

6. கவுதமேஸ்வரர் - சிவனால் உடைக்கப்பட்ட கும்பத்தில் சுற்றப்பட்ட நூல் லிங்கமாக மாறிய தலம், விருச்சிக ராசி கோயில், பசுதானம் செய்யலாம். - காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 - மகாமக குளத்தின் தெற்கு கரை.

7. அமிர்தகடேஸ்வரர் - ஒற்றைக் காலில் தவமிருக்கும் தவசு அம்பாள், சிவன் உடைத்த குடத்தில் இருந்த அமிர்தம் தங்கிய இடம். அம்பாள் அமிர்தவல்லி நாயகி. - காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 - கும்பகோணம்- வலங்கைமான் ரோட்டில் 9 கி.மீ., 98653 06840.

8. அபிமுகேஸ்வரர் - மூன்று முக பிரம்மா சந்நிதி, அமிர்த கலசத்தை சிவன் உடைத்தபோது, அதிலிருந்த தேங்காய் விழுந்து, லிங்கமான தலம், அம்பாள் அமிர்தவல்லி. - காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - மகாமக குளத்தின் கீழக்கரை.

9. நாகேஸ்வரர் - தேர் வடிவ கோயில். பிரளய கால ருத்திரர் சந்நிதியில் ஞாயிறன்று ராகுகாலத்தில் பூஜை, ராகுதோஷ நிவர்த்தி தலம். - காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - கும்பேஸ்வரர் கோயிலின் கிழக்கே. 0435-243 0386.

10. காசி விஸ்வநாதர் - கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு நதி தேவதைகளுக்கு சந்நிதி, வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்களின் பிரார்த்தனை தலம். - காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 - மகாமக குளத்தின் வடக்கு கரை. 0435- 240 0658.

11. சோமேஸ்வரர் - கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி லிங்கமான தலம், முருகனின் வலது பாதத்தில் பாதரட்சை, அம்மன் சோமசுந்தரி. - காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - கும்பேஸ்வரர் கோயில் பொற்றாமரை குளக்கரை. 0435-243 0349.

12. காளஹஸ்தீஸ்வரர் - கார்த்தியாயினியுடன் கல்யாண சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளை கோலம், 18 கை கொண்ட அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை சந்நிதி. - காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - மடத்து தெரு.

13. சாரங்கபாணி - தேர் வடிவக்கோயில், கோமளவல்லி தாயார், மாசிமகத்தன்று தெப்பம். - காலை 6.30 -12.00 மாலை 4.30 - 9.00 - பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., 94435- 24529, 0435-243 0349.

14. சக்ரபாணி - சுதர்சனஹோமம் செய்ய சிறந்த தலம், சுதர்சனவல்லி தாயாருடன் சக்கரராஜன் சந்நிதி, மகாமக புண்ணிய பலனை சக்ரபாணிக்கு அர்ப்பணிப்பது மரபு. - காலை 6.30 - 12.00 மாலை 4.30 - 9.00 - கும்பகோணம்-சுவாமிமலை ரோட்டில் 2 கி.மீ., 0435-240 3284.

15. ஆதிவராகப் பெருமாள் - சிறிய கோயில், சுவாமி மடியில் லட்சுமி தாயார். - காலை 7.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - சக்ரபாணி கோயில் அருகில். 94422 26413.

16. ராஜகோபால சுவாமி - செங்கமலத்தாயார், பசு பின்னால் நிற்க கையில் கோலுடன் சுவாமி, சப்தநதிகளுக்கும் அருள்பாலித்தவர். - காலை 7.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - பெரிய பஜார் தெரு.

17. ராமசுவாமி - தென்னக அயோத்தி, மூன்று சகோதரர்கள், சீதையுடன் ராமர், வீணை இசைக்கும் அனுமன் சிலை, (மகாமகத்தன்று மட்டும் காவிரிக்கு எழுந்தருளல்) - காலை 7.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - பெரியகடைவீதியின் தென்கோடி.

மகாமகக்குளக்கரையில் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், பாணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாகேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருத்தீஸ்வரர், பிரம்மேஸ்வரர்,

கங்காநரேஸ்வரர், முத்த தீர்த்தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர் ஆகிய 16 லிங்கங்கள் உள்ளன.






      Dinamalar
      Follow us