sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

திருவிடைமருதூரில் நாட்டியாஞ்சலி

/

திருவிடைமருதூரில் நாட்டியாஞ்சலி

திருவிடைமருதூரில் நாட்டியாஞ்சலி

திருவிடைமருதூரில் நாட்டியாஞ்சலி


ADDED : பிப் 16, 2014 03:07 PM

Google News

ADDED : பிப் 16, 2014 03:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாலிங்க சுவாமி அருள்பாலிக்கும், திருவிடைமருதூரில் தஞ்சை நாயக்க மற்றும் மராட்டிய மன்னர் காலத்தில் இருந்தே பாட்டும், பரதமும் சிறந்து விளங்கியது. நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, இந்தக் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பதை பாக்கியமாக கருதினார். 18ம் நூற்றாண்டில் அமர்சிம்ஹா என்ற மராட்டியமன்னர், திருவிடைமருதூரை ஆட்சி செய்தபோது, இசை, நாட்டியம் கொடி கட்டிப் பறந்தது.

திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி ஆரம்பத்தில் இங்கு நடனம் பயின்றனர். புல்லாங்குழல் மேதை மாலி, கோட்டு வாத்தியம் சகாராமராவ், நாதஸ்வர கலைஞர் சங்கீத கலாநிதி வீருசுவாமி பிள்ளை ஆகியோர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.

திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் பரமாச்சார்ய சுவாமியின் ஆசியுடன், முன்னாள் மாணவர்கள் சங்கம், பந்த நல்லூர் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ், விஸ்வம் பைன் ஆர்ட்ஸ் உதவியுடன், பிப்., 27, சிவராத்திரியன்று, இக்கோயிலில் மூன்றாம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. இந்தியா, அமெரிக்கா, மலேசியா, இலங்கை கலைஞர்கள் பங்கேற்கின்றனர். கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் 10 கி.மீ., தூரத்தில் திருவிடைமருதூர் உள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்க, மருதா நாட்டியாஞ்சலி டிரஸ்ட், ஆ-4, கார்த்திக் கோர்ட், வெங்கடேஸ்வரா நகர், கீழ் கட்டளை, சென்னை 600 117 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். போன்: 98946 43005.






      Dinamalar
      Follow us