
* நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை இருந்தால் நம் வாழ்க்கை உயரும்.
* அலட்சியத்துடன் பணி யாற்றுவது கூடாது. யாரையும் இழிவாகக் கருதுவது கூடாது.
* செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.
* கடமையில் மட்டும் கவனம் செலுத்தாதே. பக்தியில் கவனம் வை.
* பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
* எதையும் எதிர்பார்க்காமல் கடவுளைச் சரணடைவதே மேலான பக்தி.
* அன்பளிப்பு கொடுத்தால் மட்டும் போதாது! பக்தியும் வேண்டும்.
* குறைகளை மட்டும் கடவுளிடம் முறையிடாதே! நன்றி செலுத்துவதும் அவசியம்.
* சுவாமிக்கு நைவேத்யம், காணிக்கை செலுத்துவது நன்றியுணர்வின் வெளிப்பாடு.
* 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதே மனித வாழ்வின் குறிக்கோள்.
* தர்மத்தை முறையாக பின்பற்றினால் நிம்மதியுடன் வாழலாம்.
*சமூக சேவை, கடவுள் தொண்டை விட குடும்பத்துக்கு செய்யும் கடமையே முக்கியம்.
* நல்ல பெயர் பெறுவதற்காக சமூக சேவையில் ஈடுபாடு காட்டுவது குற்றம்.
* கருணை என்பது ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டிய சிறந்த பண்பு.
* கட்டாயப்படுத்தி ஒருவரிடம் வேலை வாங்குவதில் பெருமை உண்டாவதில்லை.
* கல்வி கற்றதன் பயன் அதை நாலு பேருக்காவது கற்றுத் தர வேண்டும்.
* அன்னதானத்தை விட கல்விக்காக செலவழிப்பது உயர்ந்தது.
* வாரம் ஒருமுறை மவுன விரதம் இருந்தால் மனம் துாய்மை பெறும்.
* இன்பமோ, துன்பமோ அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்