ADDED : செப் 30, 2020 04:20 PM

* பிறருக்கு பயனுள்ளவனாக மனிதன் வாழ வேண்டும்.
* நேர்மையை பின்பற்றினால் வாழ்வு உயரும்.
* ஒழுக்கமுள்ளவனாக வாழ பக்தியே சிறந்த வழி.
* பாவமும், புண்ணியமும் மனதை பொறுத்தது.
* மாசில்லாத மனமே கடவுள் வாழும் வீடு.
* சோர்வு இல்லாத முயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும்.
* பாலுக்குள் இருக்கும் நெய் போல கடவுள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை.
* ஒருவரின் அன்பை அவர் இல்லாத போது தான் உணர முடியும்.
* பேராசை மனிதனை அழிக்கும்.
* வளர்ச்சி, தேய்வும் வாழ்வில் மாறி மாறியே வரும்.
* நல்லது, கெட்டது தெரியாதவனை யாராலும் காப்பாற்ற முடியாது.
* செய்த நன்மை, தீமைக்கான பலனில் இருந்து யாரும் தப்ப முடியாது.
* அடக்கம், குருபக்தி கொண்டவர்கள் முன்னேற்றம் காண்பர்.
* நீதிநுால்களை தினமும் படியுங்கள்
* பிறரது குற்றங்களை பெரிதுபடுத்தவோ, நாம் செய்த குற்றங்களை மறைக்கவோ கூடாது.
* கீழ்நோக்கி பிடித்தாலும் தீ மேல்நோக்கி எரியும். அதுபோல் உயர்ந்த குணமுள்ளவர்கள் கீழ்ப்படுத்த முயன்றாலும் முடியாது.
வழிகாட்டுகிறார் வாரியார்