sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கணபதியே வருவாய்... அருள்வாய்...

/

கணபதியே வருவாய்... அருள்வாய்...

கணபதியே வருவாய்... அருள்வாய்...

கணபதியே வருவாய்... அருள்வாய்...


ADDED : செப் 19, 2023 12:42 PM

Google News

ADDED : செப் 19, 2023 12:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹிந்து மதத்தில் முதற்கடவுள் விநாயகர். இவரைப் பற்றி நிறைய விஷயங்கள் உண்டு. அவற்றில் சில,

* எந்த செயலை தொடங்கினாலும் முதலில் இவரை வணங்கினால் எல்லாம் வெற்றியே.

* குழந்தையாக இருந்தாலும் பக்தர்களை உயர்த்துவதில் முதல்வராக இருப்பவர் இவர்.

* யானையின் தலை, பெரிய வயிறு, உடம்பைக் கொண்டவர். இதனால் இவருக்கு 'ஸ்துால காயர்' என்ற பெயர் உண்டு.

* குழந்தைச்சாமியான இவரை வழிபட்டால் படிப்பு நன்றாக வரும். புத்தி வளரும்.

* சந்திரன், கடல், யானையை பார்த்தாலே மகிழ்ச்சி வரும். இதனால்தான் இவரும் யானை முகத்தோடு காட்சி தருகிறார்.

* இவரை மட்டுமே முதற்கடவுளாக வழிபடும் சமயத்திற்கு 'காணபத்தியம்' என்று பெயர்.

* சிவபெருமானின் படை, பூதகணங்களுக்கு எல்லாம் தலைவர்.

* இவரது உதவியால் வள்ளியை திருமணம் செய்தார் முருகன். எனவே இவரை வணங்கினால் திருமணம் கைகூடும்.

* மஞ்சள் பொடி, களிமண், சாணி என எளிமையான பொருட்களில் பிடித்துவைத்து பூஜை செய்யலாம்.

* சிதறு தேங்காய் இடுவது, நெற்றியில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் இடுவது ஆகியவை இவருக்கு மட்டுமே உரியவை. இவ்வாறு செய்தால் நாடிகளின் சலனம் மாறும். மனதில் தெய்வீகமான மாறுதல் உண்டாகும்.

* எழுதும் விஷயம் 'சுழித்து'ப் போகாமல் இருக்க, முன்னாடி பிள்ளையார் சுழியிடுவது அவசியம்.

* உன்னிடம் நல்ல மனம், இரக்க குணம் இருந்தாலே போதும். இவரை சந்தோஷப்படுத்தலாம்.

* விநாயகரை வணங்கினாலே சிவபெருமான், பார்வதிதேவியின் அருள் கிடைத்துவிடும்.

வரவேற்கிறார் காஞ்சி மஹாபெரியவர்






      Dinamalar
      Follow us