sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ராமரின் சக்தி கோயில்

/

ராமரின் சக்தி கோயில்

ராமரின் சக்தி கோயில்

ராமரின் சக்தி கோயில்


ADDED : ஏப் 06, 2023 09:33 AM

Google News

ADDED : ஏப் 06, 2023 09:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீதையைத் தேடிய அனுமன் கடலைக் கடந்து இலங்கையில் கால் பதித்த இடம் நுவரேலியா. இங்குள்ள ராம்போத அனுமன் கோயில் புகழ் மிக்கது. 'ராம்போத' என்பதற்கு ராமரின் சக்தி அல்லது படை என்பது பொருள். இங்கு வழிபட்டால் தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும்.

1980ல் சுவாமி சின்மயானந்தர் நுவரேலியாவில் உள்ள காயத்ரி பீடத்திற்குச் சென்றார். அவர் பயணித்த கார் செல்லும் வழியில் பழுதாகி நின்றது. பயணம் தடைபட்ட போது சுவாமிகள் அங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அனுமனின் ஒப்பற்ற சக்தி அப்பகுதி முழுவதும் பரவியிருப்பதை உணர்ந்தார். இலங்கையில் முதன் முதலாக அனுமன் பாதம் பதித்த இடம் இது என்பதை பின்னர் அறிந்து மகிழ்ந்தார். அப்பகுதியில் கோயில் கட்ட முடிவு செய்தார். 3200 அடி உயரமுள்ள விவேந்தன் மலைப்பகுதியான இங்கு 10 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த இடத்திற்கு 'ராம்போத' எனப் பெயர் சூட்டினார். 'ராமர் படை அல்லது ராமர் சக்தி' என்பது பொருள். கண்டியில் இருந்து நுவரேலியாவுக்குச் செல்லும் பிரதான சாலையில் இப்பகுதி உள்ளது.

மகாபலிபுரத்தைச் சேர்ந்த சிற்பி முத்தையாவிடம் 16 அடி உயர அனுமன் சிலை செய்யும் பணியை ஒப்படைத்தார். கருவறையில் சிலையை நிறுவிய பின்னரே கோயில் கட்டுமான பணிகளை மேற்கொண்டனர். 2001 ஏப்.8 ல் கும்பாபிஷேகம் நடந்தது. வேண்டியதை தரும் சக்தி மிக்க இந்த அனுமனுக்கு வெற்றிலை மாலை, வெண்ணெய் சாத்தி வழிபடுகின்றனர். ராமர், லட்சுமணர், சீதை தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். ராமரின் நினைவாக சீதை வைத்திருந்த கணையாழியை (மோதிரம்) அனுமனுக்கு கொடுத்ததை நினைவூட்டும் வகையில் மாசி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இதில் ஏழாம் திருநாளான மோதிரம் வாங்கும் வைபவம் சிறப்பு மிக்கது.

எப்படி செல்வது:இலங்கை நுவரேலியாவில் இருந்து 33 கி.மீ.,

விசேஷ நாள்: பவுர்ணமியன்று அபிஷேகம்

மார்கழி அமாவாசை, ஸ்ரீராம நவமி

நேரம்: காலை 7:00 - 12:45 மணி; மதியம் 3:30 - 6:30 மணி

தொடர்புக்கு: 94522 - 259 645

அருகிலுள்ள தலம்: சீதாஎலியா சீதையம்மன் கோயில் 14 கி.மீ.,

நேரம்: காலை 8:00 - 1:00 மணி; மதியம் 2:00 - 6:30 மணி

தொடர்புக்கு: 94522 - 222 038






      Dinamalar
      Follow us