sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அன்பாலே அழகாகும் வீடு! ஆனந்தம் அதற்குள்ளே தேடு!

/

அன்பாலே அழகாகும் வீடு! ஆனந்தம் அதற்குள்ளே தேடு!

அன்பாலே அழகாகும் வீடு! ஆனந்தம் அதற்குள்ளே தேடு!

அன்பாலே அழகாகும் வீடு! ஆனந்தம் அதற்குள்ளே தேடு!


ADDED : மார் 09, 2018 12:02 PM

Google News

ADDED : மார் 09, 2018 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தில் அன்பு இருந்தால் வீடும், நாடும் அழகு பெறும். அப்போது ஆனந்தத்திற்கு குறைவிருக்காது.

* ஒருவரிடமும் பகைமை பாராட்டாமல் இன்முகம் காட்டினால், அது உலகையே உங்கள் வசப்படுத்தி விடும்.

* கடமையை உணர்ந்து அதற்குரிய காலத்தில் செய்தால் உள்ளத்தில் அமைதி நிலைக்கும்.

* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என்பதே உத்தமர் இயல்பு.

* உணர்ச்சிவசப்பட்டு மனம் போன போக்கில் செயல்படுவது நல்லதல்ல. அறிவு காட்டும் வழியில் செயல்படுவதே ஆன்மிக உயர்வு தரும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றின் ஆற்றலுக்கும் விளைவுண்டு. இதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

* முறை தவறி செய்யும் செயலின் விளைவு, துப்பாக்கி குறி தவறி வெடிப்பது போன்றது.

* வஞ்சகர் எதிரியாய் வந்து விட்டால் வியப்பில்லை; நண்பராய் வளர்ந்தால் பெருந்தொல்லை.

* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வை கெடுக்கும்.

* ஆராய்ச்சி இல்லாத நம்பிக்கை, தாழ்ப்பாள் இல்லாத கதவு போன்றது. லட்சியம் இல்லாத ஆராய்ச்சி, கதவு இல்லாத வீடு போல் ஆகும்.

* வாழ்த்து ஒருபோதும் வீண் ஆகாது. வாழ்த்து சொல்ல, சொல்ல உடலும், மனமும் நன்றாக இருக்கும். நம்மை சுற்றிலும் நல்ல அலை இருந்து கொண்டே இருக்கும்.

* ஒழுக்கத்தின் மூலமே வாழ்வில் உயர்வடைய முடியும். இந்த ஒழுக்கத்தை பாதுகாக்கும் கவசமே திருமணம்.

* பகைமையை வைத்து கொண்டு வாழ்த்த முடியாது. வாழ்த்தும் போது பகைமை இருக்காது.

* தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் இல்லை. தீர்க்கும் வழியை தீர்க்கமாக அறியாதவர்களே இருக்கிறார்கள்.

* கோபத்தால் யாரையும் திருத்த முடியாது. ஒருவேளை அவர் நமக்கு பயந்து கொண்டிருக்கலாம். ஆனால் திருந்தியிருக்க மாட்டார்.

* எந்தசூழ்நிலையிலும் ஒருவருக்கு கோபம் வரவில்லை என்றால், அவர் ஞானம் பெற்று விட்டார் என்று அர்த்தம்.

* விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால், அதுவே மேன்மை அடைவதற்கான வழி.

வழிகாட்டுகிறார் வேதாத்ரி மகரிஷி






      Dinamalar
      Follow us