ADDED : அக் 11, 2019 10:36 AM

* அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை வரவழைக்கும்.
* உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது.
* ஒருவரிடம் அன்பு இருந்தால் ஆகாதது ஒன்றுமில்லை. பொதுநலம் உள்ளவராக இருந்தால் அவரை எதிர்க்க யாருமில்லை.
* அறிவுச் சுரங்கத்தை திறக்கும் சக்தி மன ஒருமைப்பாட்டுக்கு உண்டு. அதன் பின் எல்லாம் சாத்தியமே.
* பலவீனமான மனம் கொண்டவர்கள் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாமல் சிரமப்படுவர்.
* சுதந்திரமாகச் செய்யும் செயல் நேர்த்தியாக அமையும். அதனால் எஜமானன் போல செயலாற்றுங்கள்.
* ஓய்வு இன்றி பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள். ஆனால் ஒருபோதும் அதில் சிக்க வேண்டாம்.
* வாழ்வின் லட்சியம் இன்பம் என எண்ணி நாம் ஓடுகிறோம். ஆனால் ஞானமே வாழ்வின் உண்மையான லட்சியம்.
* அறிவுடன் ஒன்றி விடும்போது பிழைகளைத் திருத்தி வெற்றி காண முடியும்.
* தாயும் தந்தையும் மகிழ்ச்சியடைந்தால் கடவுளும் மகிழ்ச்சியடைகிறார்.
* கருணை என்பது இனிய சொர்க்கம். எனவே நாம் அனைவரும் கருணையோடு இருப்போம்.
* தவறுகளை பெரும்பேறாக கருதுங்கள். அவை நமக்கு வழி காட்டும் தெய்வங்கள்.
* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி.
* சில நேரங்களில் பலவீனம் கூட மிகப்பெரிய நன்மையாக மாறிவிடுகிறது.
* அஞ்சாத வீரனைப் போல வாழ்வில் குறுக்கிடும் சவால்களை சந்தித்தால் வெற்றி உங்களுக்கே.
* ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது.
சொல்கிறார் விவேகானந்தர்