/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஒருவருக்காவது மகிழ்ச்சியைக் கொடு! வேண்டுகோள் விடுக்கிறார் சாரதாதேவியார்
/
ஒருவருக்காவது மகிழ்ச்சியைக் கொடு! வேண்டுகோள் விடுக்கிறார் சாரதாதேவியார்
ஒருவருக்காவது மகிழ்ச்சியைக் கொடு! வேண்டுகோள் விடுக்கிறார் சாரதாதேவியார்
ஒருவருக்காவது மகிழ்ச்சியைக் கொடு! வேண்டுகோள் விடுக்கிறார் சாரதாதேவியார்
ADDED : டிச 03, 2010 03:18 PM

* இறைவனுக்கும் அவனது அடியார்களுக்கும் பணக்காரன் தனது பணத்தின் மூலமும், ஏழை, இறைவனின் திருநாம உச்சரிப்பின் மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.
* தவறுகள் மனித இயல்பு, அதைப் பெரியதாக எண்ண வேண்டுவதில்லை. அதனை மீண்டும், மீண்டும் நினைப்பதால் துன்பமே ஏற்படுகிறது.
* ஒரு நாளில் 24 மணிநேரமும் பிரார்த்தனையில் செலவழிக்க முடியாது. பணிபுரிவதில் நிறைய நேரத்தைச் செலவிட்டால், அதுவே மனம் தூய்மையடைய வழி வகுத்து விடுகிறது.
* இறைவனின் விருப்பத்தாலேயே அனைத்து விஷயங்களும் நடக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மனிதன் செயலாற்றினால் தான் இறைவனின் விருப்பம் வெளியாகிறது.
* இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவான்.
* வாழும் உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மன மகிழ்ச்சியை அளித்தால் உன் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள்.
* நம்பிக்கையும், உறுதியுமே அடிப்படை, இவை இரண்டும் வாழ்க்கையில் இருந்தால் அனைத்தும் இருந்ததற்கு சமமாகும்.
* மனம் அமைதி பெற பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். உங்கள் குறைகளை எண்ணிப்பாருங்கள். உலகம் முழுவதும் அன்பினால் சொந்தமாக்கிக் கொள்ளுங்குள். உலகில் எவரும் அந்நியரல்ல, உலகம் உங்களுடையது.
* ஜெபம், தவம் முதலான சாதனைகளில்லாமல் மனம் தூய்மை அடையாது. தூய மனத்தாலன்றி இறைவனை அறியவும் முடியாது.